கராச்சி, ஜூலை 31- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அல்லது செய்யவில்லையோ, அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் அவர்களுக்கு பொறுப்பு இல்லை. நாங்கள் தலீபான்களின் செய்தித் தொடர்பாளர்களும் அல்ல.நாங்கள் ஆப் கானிஸ்தானில் அமைதியைத்தான் விரும்புகிறோம். அமெரிக்கா ஆதரவு பெற்ற ராணுவ தீர்வு வேண்டுமா, எல்லோரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வு வேண்டுமா என்பதை ஆப்கானிஸ்தான் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.பாகிஸ்தானில் 30 லட்சம் அகதிகள் உள்ளனர். 50 ஆயிரம் பேர், 1 லட்சம் பேரைக்கொண்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. எனவே தலீபான்கள் செயலுக்கு நாங்கள் எப்படி பொறுப்பு ஆக முடியும்?
பாகிஸ்தான் எல்லையில் வேலி போடும் வேலையில் 90 சதவீதத்தை முடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் நலனுக்காக உள்நாட்டுப்போர் மூள வில்லை.தற்போது எனது அரசு, ஆப்கானிஸ்தானை வெளியில் இருந்து கட்டுப்படுத்த முடியாது என்ற நம்புகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலவும்
அமைதியின்மை கவலையளிக்கிறது இந்திய தூதர் திருமூர்த்தி
நியூயார்க், ஜூலை 31- அய்க்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறியதாவது:
அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சுழற்சி முறை தலைவராக ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்தியா பொறுப்பேற்க உள்ளது. அய்.எஸ். உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையடுத்து அங்கு நிலவும் அமைதி யின்மை கவலையளிக்கிறது. பயங்கரவாதம், பிரிவினை வாதம் இன்றி சுதந்திரமான ஆப்கானிஸ்தான் உருவாவ தைத் தான் இந்தியா விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றி பாதுகாப்பு கவுன்சில் நிச்சயம் விவா திக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment