சென்னை, ஜூலை 4- அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மய்யங்களில் பயில்வோர், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாகனங் களை ஓட்டிக் காட்டத் தேவையில்லை என்ற புதிய விதிமுறை 2.7.2021 அன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவில் திறமையான ஓட்டுநர்களை உருவாக்க அங் கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மய்யங்களை உருவாக்க அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போதுள்ள நடைமுறையின் படி, அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுநராகப் பயிற்சி பெற்றவர்கள், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், வாகனத்தை ஓட்டினால் மட்டுமே தற்போது வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைகளில்தான், ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம், அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மய்யங்களில் பயிற்சி முடிப்பவர்கள், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் போது, ஓட்டுநர் பரிசோதனை தேர்வில் கலந்து கொள்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். அவர்களுக்கு நேரடியாக உரிமம் வழங்கப்படும் .
Sunday, July 4, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment