ஒசூர்,ஜூலை1- ஒசூரில் தந்தைபெரியார் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் அரசு வைத்து தர வேண்டி ஒசூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஒசூர் சாராட்சியர் மிஷாந்த் கிருஷ்ணா, ஒசூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு அளிக்கப் பட்டது.
ஒசூர் உள்வட்ட சாலை, முனீஸ்வர்நகர், வ.உ.சி நகர்(நியூ ஏ.எஸ். டி.சி அட்கோ) சந்திப்பு பகுதியை ஒசூர் பொது மக்களும் வெளியூர் மக்களும் அடையாளம் காண ஏதுவாக அப்பகுதி யில் உள்ள முனீஸ்வர் நகர், வ.உ.சி.நகர், துவாரக நகர், அன்னை நகர், நாதன்நகர், சிவகுமார்நகர் குடியிருப்பு நலச்சங்களின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் பெயர் பலகை திறப்பாளர் நகர் மன்ற தலைவர் பால கிருஷ்ணா ரெட்டி -தவிர்க்க முடியாத நிலை யில், ஒசூர் அனைத்து குடியிருப்போர் கூட்ட மைப்பு தலைவர் ஆர்.துரை 10.5.2015 அன்று பொது நிகழ்ச்சி நடத்தி
"ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து மானுடப் பற்றை மய்யமாக வைத்து தமிழக மக்களின் நலன் சார்ந்த விடயத்தில் தனது வாழ்வின் இறுதிவரை உழைத்த தந்தை பெரி யாரை நினைவு கொள்ளும் வகையில் "தந்தை பெரியார் சர்க்கிள்" என்று பெயர் பலகையை திறந்து வைத் தார்.
அன்று நகர்மன்ற தலை வராக இருந்த மேனாள் விளையாட்டு துறை அமைச்சர் தி.பாலகிருஷ்ணாரெட்டியிடம் 15.05.2015 முனிஸ்வர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர் காட் ராஜா(எ)வனவேந்தன்,
33ஆவது வார்டு நகர் மன்ற
உறுப்பினர் எல் லோரா மணி, 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப் பினர் இளையபெருமாள் ஆகியோர் கடிதம் மூலம் நகர்மன்ற கூட்டத்தில் தந்தை பெரியார் பெயர் பலகையை நிரந்தரமாக வைக்க ஏதுவாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறித் தியும் இது நாள்வரை செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தந்தை பெரியார், திருவள் ளுவர், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் சிலைகளை காவிகள் காலிகள் அவ மரியாதை செய்த நேரத்தில், இந்து அமைப்புகளான இந்துமகா சபா, இந்து முன்னணி, பிஜேபி அமைப்பினர் பெரியார் சர்க்கிள் பெயர் பலகையை அகற்றிவிட்டு அந்த இடத்தில் முனீஸ்வரன் சர்க்கிள், ராமநாயக்கர் சர்க்கிள், பிஜேபி ஆட் டோ ஸ்டாண்ட் என பெயர் பலகை வைத்து கலவரம் செய்ய முயன்ற போது காவல்துறை, மாநகராட்சி நிருவாகத் திடம் புகார் அளிக்கப் பட்டது. அப்போது ஒசூர் ஆணையர், மாற்றி வைக்கப்பட்ட பெயர் பலகையை அகற்றிவிடுவ தாகவும், மாநகராட்சி மூலம் முறையாக
தந்தை பெரியார் பெயரில் பெயர் பலகையை வைத்து தருவ தாக ஆணையர் வாய்வழி வாக்குறுதி தந்தார்.
காவல்துறையினரும் வழக்கு எல்லாம் வேண் டாம் என கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைதிகாத்து வந்தோம்.
ஒசூர் மாநகர ஆணை யரிடம் 17.9.2020 அன்று மனு அளித்து பெயர் பலகை வைத்துதர கோரியிருந்தோம்.இதுநாள் வரை செய்யாத நிலையில் புதிய அரசு பொறுப் பேற்றுள்ள இந்நிலையில் ஒசூர் சட்டமன்ற உறுப் பினர், ஒசூர் சாராட் சியர், ஒசூர் மாநகர ஆணையர் ஆகி யோரிடம் மீண்டும் மனு அளித்து தந்தை பெரி யார் சர்க்கிள் பெயர் பலகை யை அதே இடத் தில் அரசு முறையாக வைத்து தர வேண்டு கிறோம்.
இவ்வாறு சார்ஆட்சிய ரிடம் கழகப் பொறுப்பா ளர்கள், பகுதிவாழ் பொது மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், செயலாளர் மா.சின்ன சாமி,அமைப்பாளர்ப.முனுசாமி, மாவட்ட திராவிடர் தொழிலா ளரணி தலைவர் சி.மணி, செயலாளர் தி.பால கிருஷ் ணன்,மாவட்ட ப.க. செய லாளர் சிவந்தி அருணா சலம், துணைச் செயலா ளர் ஜெய சந்தர்,மாவட்ட இளை ஞரணி செயலாளர் வ.செ.மதிவாணன், ப.க. மாவட்ட அமைப் பாளர் ஜெகநாதன், நகர செயலா ளர் அஃப்ரிடி துணைத் தலைவர் சின்ன ராசு, துணை செயலாளர் பெ.கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊடக மய்ய மாவட்ட அமைப் பாளர் இளையராஜா, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் க.கா.சித் தாந்தன், உதயகுமார் ஆகி யோர் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment