விடுதலை 28.5.2021 அன்றைய இதழ் 2ஆம் பக்கத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கட்டுரை படித்து இதை எழுதுகிறேன்.
இந்தியாவை பாரதம் என்று சொல்வது கண்டனத்திற்குரியது.
சமசுக்கிருதத்திற்கும் மூத்ததான தமிழ் இடம் பெறவில்லை. தமிழைத் திட்டமிட்டுப் பாடத் திலும் புறக்கணிக்கும் திருப்பணியைச் செய்திடும் அவலத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
முதல்பாடமே முரண்பாட்டின் - திரிபுவாதத் தின் மொத்தமாக இருக்கிறது.
முதல் கோணல் முற்றும் கோணல். திராவிடக் கோட்பாடுகளைத் தகர்த்தெறிகிறார்கள்.
இது பண்பாட்டுப் படையெடுப்பு என்பதில் கிஞ்சிற்றும் அய்யமில்லை,
இந்தியாவையே காவி மயமாக்கும் கயவாளித் தன ஆட்சியின் அத்துமீறல்.
இவை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப் பெற வேண்டும்.
கருத்துப்பிழை உள்ளது.
ஒன்றுபட்டு வாழும் சமூகத்தைக் கூறு போட்டுப் பார்க்கும் அற்பத்தனத்தைச் செய்கிறது பி.ஜே.பி. அரசு.
இது நாட்டு நலனுக்கு எதிரானது.
சமநிலையில்லாத மதச்சார்பு அணுகுமுறை கொண்டவர்களின் திருட்டுத்தனமான, கேவல மான செயல்.
இதற்கு கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்.
தேசப்பிதாவையே சதித்திட்டம் செய்து முதன் மையைக் குறைத்து மிகச் சாதாரணமாகக் காந்தி என்று மட்டும் எழுதியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு வக்கிரப்புத்தி?
இந்தப் பாடத்திட்டம் சாக்கடைச் சேற்றில் புதைக்கப் பெற வேண்டியது.
அக்கினித்தீயில் சாம்பலாக்கப்பட வேண் டியது.
தமிழகமே பொங்கி எழ வேண்டும்.
இந்திய விடுதலைப் போர் வரலாறு முழுமை யில்லை, நடுநிலை இல்லை. உள்நோக்கமுடையது.
இவர்களின் பாடத்திட்டமே முழுமையாகத் தேவையில்லாதது. ஏற்கவும் முடியாது.
தமிழ்நாட்டு வரலாற்றுக்கும்கூட ஒரு தாள் இல்லை எனில், எவ்வளவு ஒரு சார்ந்த நிலை என்பதைப் படிப்போர் உணர்வர்.
பி.ஜே.பி.யின் மதவெறிக்கு அளவே இல்லையா? எல்லையே இல்லையா?
பாடத் திட்டங்களுக்குள்ளேயே முரண் பாடுகள் நிறைய இருக்கின்றன.
இதற்குக் கண்டனக் குரல் எழுப்பாமல், கண்ட னத்தைப் பதிவு செய்யாமல் இருக்கவே முடியாது.
வருணாசிரம சாஸ்திரத்தைத் திணிக்கிறது வலுக்கட்டாயமாக.
150 ஆண்டு காலப் பல்கலைக்கழக வர லாற்றில் ஒரு போதும் டில்லியிலிருந்து பாடம் திணிக்கப் பெற்றது இல்லை.
பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறிக்கும் வகையில் இது இருக்கிறது.
பாடத் திட்டத்தை திரும்பப் பெற்றாக வேண்டும் என மிக வலியுறுத்துவோம்.
- க.பழனிசாமி
தெ.புதுப்பட்டி - 624705
No comments:
Post a Comment