டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கரோனா நோய் தொற்றால் உயிரிழந்த குடும்பங் களுக்கும் ரூ.4லட்சம் வழங்க வேண்டும் என நேரடி உத்தரவை பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தொகை எவ்வளவு என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு தீர் மானிக்கும். தீர்மானித்து கொடுக்கும். இதில் மேற்கண்ட அனைத்து உத்தரவுகளுக்குமான வழிகாட்டு நெறிமுறை களை அடுத்த 6வாரத்தில் வெளியிட்டு அதனை ஒன்றிய
அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி அசோக்பூஷன் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளை அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் உள்ளிட்ட 20 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மதுரை எய்ம்ஸ்-க்காக சரியான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து வழங்கினால் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு ,எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
தி ஹிந்து:
* அய்ந்தாண்டுக்கு ஒரு முறை ஆட்சியாளரை மாற்றினால் கொடுங்கோன்மைக்கு எதிரான உத்தரவாதமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தற்போதைய கரோனா தொற்று நோயின் போது எளிய மக்களின் உயிர் களைப் பாதுகாக்க சட்ட விதி எந்த அளவிற்கு பயன்படுத்தப் பட்டது என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும் என இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா
கூறினார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment