சென்னை,ஜூலை 31- திருப் புவனம் அருகே கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்கு 2014 முதல் அகழாய்வு நடந்து வரு கிறது. ஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வு ஒன்றிய தொல்லியல் துறை மூலமாக வும், நான்கு, அய்ந்து, ஆறாம் கட்ட அகழாய்வு தமிழ்நாடு தொல்லியல் துறை மூலமும் நடந்தன.
தற்போது 7ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 6ஆம் கட்ட அகழாய்வு மூலம் 14,535 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன.
இந்த அகழாய்வு மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வந்தது. இந்நிலை யில், கீழடியில் வெள்ளிக் காசு ஒன்றும் கண்டறியப்பட்டுள் ளது.
இது தொடர்பாக, தமிழ் ஆட்சி மொழி, தமிழ்க் கலாச் சாரம், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 29.7.2021 அன்று தன் முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாவது:
"கீழடியின் கொடை குறைவதில்லை!
கீழடி அள்ளித் தந்த மரபுச் செல்வங்களுக்குள் ஒரு வெள்ளிக் காசும் இப்போது இணைந்திருக்கின்றது.
'கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள் ளுவோம்' எனப் பாடிய பாரதியின் வணிகக் கனவினைப் பொது யுகத்துக்கு முன்னூற்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் னரே நனவாக்கிக் காட்டிய கீழடித் தமிழ்ச் சமூகத்தின் வணிகத் தொடர்புகளுக்கான ஆதாரம் அது.
வெள்ளியிலான முத்திரைக் காசு (Punch Marked Coin) ஒன்று சில நாட்களுக்கு முன் கீழடி அகழாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் வழியே இதன் காலம் மவுரியர்களின் காலத்துக்குச் சற்று முன்னதாக பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டின் நடுவிலானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருது கின்றனர்.
முன்புறம் சூரிய சந்திரர்கள், காளை, எருது, நாய் போன்ற குறியீடுகளும் பின்புறம் அரை வட்டம் மற்றும் 'ட' வடிவக் குறியீடுகளும் காணப்படு கின்றன.
2.20 கிராம் எடையுள்ள இந்த வெள்ளிக் காசு, வட புலத்தாருடன் நம் பழந்தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான மற்று மொரு சான்று".
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment