தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்
சென்னை, ஜூலை 4 காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடிசெலவில் புதிய அணை கட்ட கருநாடக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த மனு விசாரணையில் உள்ள நிலையில் கருநாடக அரசுஅணை கட்ட அனுமதி கோரி மத்திய நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத் திடம் அனுமதி கோரியுள்ளது.
கடந்த 17-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து, கருநாடக அரசின் மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது’ என வலியுறுத்தினார். கடந்த வாரம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தமிழ் நாடு அரசு மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் கருநாடக முதல மைச்சர் எடியூரப்பா நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரு பக்க கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
"400 மெகாவாட் மின்சாரம், 4.75 டிஎம்சி குடிநீர் தேவைக் காகவே கருநாடக அரசு மேகதாது கூட்டு குடிநீர் மற்றும் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்துள் ளது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண் டிய நீரை வழங்குவதில் எவ்வித தடங்கலும் ஏற்படாது. காவிரி நீரை நம்பியுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இந்த திட்டத் தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டம் இரு மாநில மக் களுக்கும் நலனையே பயக்கும். ஆனால் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்துக்கு எதிராக ஏற்கெ னவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த சூழலில் நான் கருநாட காவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நல்ல உறவை மேம்படுத்த விரும்புகிறேன். இதை தமிழ்நாடு அரசு நல்ல முறையில் பரிசீலித்து, மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரி விக்காமல் இருக்க வேண்டும். இந்த விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில் இருமாநில அதிகாரிகளையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தை மேற்கொள்ள லாம்." இவ்வாறு எடியூரப்பா கடி தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment