சென்னை, ஜூலை 1 தமிழகத்தில் இதுவரை ரூ.500 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ள தாக இந்து சமய அற நிலை யத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் இந்து சமய அற நிலை யத்துறை அமைச்சர் சேகர் பாபு, அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு பணி களை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தி யாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவிலுக்கு சொந் தமான நிலங்களில் குடியி ருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோவிலுக்குச் சொந்தமான இடம் என தமிழகம் முழு வதும் இதுவரை மொத்தம் ரூ.500 கோடி மதிப்பிலான 79 ஏக்கர் கோவில் நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறையால் மீட்கப்பட் டுள்ளது.
கடந்த கால அரசானது எந்த வித செயல்பாடுகளும் இல்லாமல் இருந்த அரசு என்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையே ஒரு சான்று ஆகும். கோவில் நிலங்களை மீட்கும் பணி தொடரும். கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் குடி யிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment