கேள்வி: மராத்தா இட ஒதுக்கீடு பற்றி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி துக்ளக் இதழ் துள்ளி குதிப்பது பச்சைப் பார்ப்பன புத்தி அல்லவா ?
- எஸ். பத்ரா, வந்தவாசி.
பதில்:
அதிலென்ன சந்தேகம்? ஆசைகளை, கனவுகளை 'குதிரைகளாக்கி' சவாரி செய்து மகிழும் சவுண்டிகளுக்கு இப்படி ஒரு வியாதி! பெரியார் மண் என்பது புரிகிறதல்லவா?
- - - - -
கேள்வி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தில் (TNPSC) கடந்த அ.தி.மு.க அரசால் உருவாக்
கப்பட்ட, மற்ற மாநிலத்தவர்களும் தேர்வு எழுதலாம் என்ற நிலையினை உண்மையான திராவிடர் ஆட்சியான தி.மு.க
அரசு அதனை முற்றிலுமாக நீக்க முற்படுமா?
- சு.மோகன்ராஜ், தாம்பரம்.
பதில்:
நிச்சயமாக மாற்ற வேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உண்மையானதாக இருக்கும். முந்தைய
திமுகழக ஆட்சி
நிலைப்பாட்டுக்கு திருப்ப வேண்டியதுதான் சமூகநீதியைப் பாதுகாக்க ஒரே வழி!
- - - - -
கேள்வி: பேராசிரியர்
ந.இராமநாதன் அவர்கள் படைப்பான "பெரியாரியல் தொகுதிகள்" தொடர்ச்சி யாக வெளி வருமா?
- கருணாகரன், ஆவடி
பதில்: ஏற்கெனவே வெளிவந்தவை புதிய பதிப்புகள் கிடைக்கின்றன.
மீதமுள்ள
புதிய பாடங்கள் தொடர்ந்து விரைவில் வெளியிடப்படும். நன்றி!
- - - - -
கேள்வி:
கேரளாவில் உள்ள அனைத்துப் பள்ளி களிலும் முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்றுவிக்க ஏதுவாக, தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்ய, கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளதற்கு ஒரு சபாஷ் போடலாம்தானே!
- கு. கணேஷ், கடப்பாக்கம்.
பதில்:
நிச்சயமாக, பாராட்டப்படவேண்டியது தான். தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தமிழாசிரியர்
களை நியமிக்க மத்திய அரசு கல்வி அமைச்சகம் தயங்கும் நிலையில், மாநில முதல்வர் இப்படி செய்தது வரவேற்கத்தக்கது. நியாயமானதும்கூட.
- - - - -
கேள்வி: பிரதமர்
மோடி ஏழாண்டுகள் ஆட்சியில் இருந்தும் உறுப்படியான பயனுள்ள திட்டங்கள் அறி விக்காமல் மன்கிபாத்தில் அழுதுவிட்டு செல்கிறாரே! எஞ்சிய மூன்றாண்டகள் எப்படி இருக்கும்?
- மணிமேகலை,
வியாசர்பாடி
பதில்:
கடந்த 26ஆம் தேதி டில்லியில் விவசாயிகள் காட்டியுள்ள எதிர்ப்பு போல் நாடு தழுவிய அளவில் வலுப் பெற்றால் வியப்பில்லை!
- - - - -
கேள்வி: பாலினத்தில்
சமத்துவம் ஏற்பட விதவை, கைம்பெண், மலடி என்ற சொற்களை அறவே நீக்கு வதின் மூலம்தானே பாகுபாட்டைக் களைய முடியும்?
- ம.முத்தியாலம்மாள், சைதாப்பேட்டை
பதில்:
சொற்களை நீக்கினால் மட்டும் போதாது. செயல்களில் உண்மையான மாற்றம் வந்தால், சொற்கள் நடைமுறையில்
இல்லாத நிலை வந்தால், மாறித்தானே தீரவேண்டும்.
- - - - -
கேள்வி: மத மறுப்பு திருமணங்களை
சுயமரியாதைத் திருமண அடிப்படையில் செய்துகொள்ளும் வகையில் புதிய சட்டம் வலியுறுத்தப்படுமா?
- மதியழகன், மறவனூர்
பதில்:
அதற்கு முன்பாக தி.மு.க.
ஆட்சி செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளன. கரோனா பெருந் தொற்று நீங்கட்டும். பின்னர் வரிசையாக அணிவகுக்கும் பல முற்போக்கு செயல்
திட்டங்கள்!
- - - - -
கேள்வி:
சமூகநீதித் தலைவர்களை சிலர் ஜாதி தலைவர்களாகவே பார்ப்பதுடன், அவர்களை திராவிட இயக்கம் இருட்டடிப்பு செய்வதாக பொய்யான பரப்புரை மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்வதன் மூலம் எதிர்காலத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை போல் ஆகிவிடாதா?
- கார்த்திகேயன்,
ஆண்டிமடம்
பதில்: சமூகநீதித் தலைவர்களை சிலர் ஜாதித் தலைவர்களாகவே பார்க்கும் பார்வையை நாம் தொடர்ந்து கண்டித்து வருகிறோம். சில 'விளம்பர விரும்பிகளும்', போலிகளும், போக்கற்றவர்களும் எழுப்பும் அவதூறுகளுக்கு பதில்
சொல்லி அவர்களை 'பெரிய ஆளாக' காட்டக் கூடாது!
- - - - -
கேள்வி:
போக்சோ சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும், பெரிய அளவில் விளம்பரப் படுத்தப்படும் பள்ளிகளில் (பத்ம சேஷாத்திரி) கூட
பாலியல் அத்துமீறல் நடைபெறுகிறதே
என்னதான் தீர்வு?
- திராவிட
விஷ்ணு, வீராக்கன்
பதில்: "சட்டத்தின் கைகள் நீளம். சட்டத்தினை மீறும் கைகள் அதைவிட நீளம்" என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி.
கடுமையான
நடைமுறையும், கண்காணிப்பும் பாலியல் பற்றிய போதிய அறிவு பரப்புவதும், எல்லாம் இணைந்து நடைபெற்றால், வேலியே பயிரை மேயும் வெட்கக்கேடான நிலை நிச்சயம் மாறும். தண்டனை மட்டுமே போதாது!
- - - - -
கேள்வி:
கேரளாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்தது கேரள
அரசியல் வரலாற்றில் ஓர் முக்கிய திருப்புமுனை அல்லவா?
- க. காமராஜ், செய்யாறு.
பதில்:
கேரள அரசியல் வரலாற்றில் வரவேற்க வேண்டிய ஒரு நல்ல செய்தி இது. மற்றவர்கள் உரிமையை, மார்க்சிஸ்ட்டுகள்
மதிக்கத் தெரிந்தவர்கள்.
- - - - -
No comments:
Post a Comment