'ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பிள்ளையாரை உடைத்ததால்தான் பிள்ளையாருக்கு தமிழ்நாட்டில் இவ்வளவு மகத்துவம், மூலை முடுக்கில் எல்லாம் அவருக்கு கோவில் என்று காஞ்சி மஹா பெரியவாள் கூறினாராம்.
- துக்ளக்
2.6.2021 பக்.29
அப்படியானால்
பிள்ளையாருக்கு இன்னும் கூடுதல் மகத்துவம் கிடைத்திட வீதிக்கு விதி, வீட்டுக்கு வீடு சங்கரமடப் பக்தர்களே உடைக்கலாமே! பிள்ளையாருக்கு என்று தனி மகத்துவம் இல்லை. பிள்ளையாருக்குக்கூட மகத்துவம் ஏற்பட்டது பெரியாரால் தானே? பேஷ்! பேஷ்!!
இன்னொரு
தகவல் உண்டு. பாரதத்தின் ஒரு பாகமான உத்தர கீதை இவ்வாறு கூறுகிறது.
துவிதர்களுக்கு
(பிராமணர்களுக்கு) தெய்வம் அக்னியில், முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில். அப்படி என்றால் விநாயகரை (சிலையாக) கும்பிடுபவர்கள் புத்தி குறைந்தவர்கள்தானே!
இன்னொரு
சேதி தெரியுமா? விநாயகன் என்ற பெயர் புத்தருக்கு உண்டு - விநாயகன் என்றால் தலைவன் என்று பொருள் அது பிள்ளையாருக்கு எப்படி வந்தது? பார்ப்பனர்களின் சூழ்ச்சி இங்கேதான் இருக்கிறது - பார்க்க மயிலை சீனிவெங்கடசாமியின் 'பவுத்தமும் தமிழும்"
No comments:
Post a Comment