தந்தை பெரியாரின் தமிழகம் கடந்த சுற்றுப் பயணங்களை விவரிக்கும் புத்தகங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

தந்தை பெரியாரின் தமிழகம் கடந்த சுற்றுப் பயணங்களை விவரிக்கும் புத்தகங்கள்

வடநாட்டில் பெரியார் தொகுதி-1


1940 ஆண்டு பம்பாயில் நடை பெற்ற அம்பேத்கர் முகமது அலி ஜின்னா தந்தை பெரியார் சந்திப்பை விளக்குகிறது.

 1941 எம்.என் ராய் அவர்களின் அழைப்பை ஏற்று கொல்கத்தா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளுக்கு சென்று பயணித்த போது நடந்த நிகழ்வுகளை விளக்குகிறது.

1944 ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் தந்தை பெரியார் பங்கேற்ற செய்தி, ஆற்றிய உரை ஆகியவற்றை விளக்கு கிறது.

1950 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற திராவிடர் கழக மாகாண மாநாட்டு நிகழ்வுகளையும் பயணத்தையும் விளக்குகிறது.

வடநாட்டில் பெரியார் தொகுதி-2

1959 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தம் குழுவினருடன் சாலைவழியாக பயணம் செய்து கொள்கை பரப்பிய தக வல்களைப் பரப்புகிறது.

குறிப்பாக, கான்பூர், லக்னோ, டெல்லி பகுதிகளில் நடைபெற்ற இந்திய குடியரசு கட்சி மாநாடுகளில் பங்கேற்று ஆற்றிய உரை, லக்னோ பல்கலைகழகத்தில் பெரியார் பேசியபோது நடைபெற்ற நிகழ்ச் சிகள்  இவற்றை பதிவு செய்துள்ளது.

1968 ஆம் ஆண்டு தந்தை பெரியார் லக்னோவுக்கு மேற் கொண்ட இலட்சிய பயணத்தை விவரிக்கிறது.

1970 ஆண்டு மேற்கொண்ட பம்பாய் பயணத்தை விளக்குகிறது.

மலேசியா - சிங்கப்பூரில் பெரியார்

தந்தை பெரியார் 1929 - 1930ஆம் ஆண்டுகளில் அன்னை நாகம் மையாருடன் மேற்கொண்ட ஒருங் கிணைந்த மலேயா நாட்டு சுற்றுப் பயணம், அந்த பயணம் குறித்த பெரியாரின் உரை, பயணம் ஏற் படுத்திய தாக்கம் குறித்து மலேயா தமிழர்களின் பதிவுகள் ஆகியவற்றை கொண்ட ஆவணக் களஞ்சியமாக விளங்குகிறது.

தந்தை இரண்டாவது முறையாக 1954-1955ஆம் ஆண்டுகளில் அன்னை மணியம் மையாருடன் மேற் கொண்ட  மலேசியா மற்றும் சிங்கப்பூர் பயண விவரங்களை விளக்குகிறது.

மேலும் பயணம் குறித்து தந்தை பெரியார் ஆற்றிய உரைகள், சிங்கப்பூர் தமிழர்களின் கட்டுரைகள் ஆகிய வற்றை கொண்ட நூல்.

அய்ரோப்பாவில் பெரியார்

தந்தை பெரியாரின் இரஷ்ய பயணம் குறித்த பல புரட்டுகளுக்கு பதிலளிக்கும் புத்தகம்.

1931 - 1932 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளுக்கும், சோவியத் யூனிய னுக்கும் பயணம் செய்த போது நடைபெற்ற நிகழ்வு கள், பெரியார் ஆற்றிய உரைகள் ஆகியவற்றை விவரிக்கிறது.

இரஷ்யா சென்று வந்ததற்கு முன்னும் பின்னும் அவரது ஏடுகளில் பதிவு செய்துள்ள இரஷ்யா பற்றிய ஏராளமான கட்டுரைகள், அவரது பயணத்தின் விளைவாக சுயமரி யாதை இயக்க வேலைத் திட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை விளக்குகிறது.

அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

- ழகரன்

No comments:

Post a Comment