மேற்கு வங்கத் தேர்தல் முடிவு: எண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைக்கவில்லை! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 2, 2021

மேற்கு வங்கத் தேர்தல் முடிவு: எண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைக்கவில்லை!

மேற்கு வங்க மாநிலத்தில் எந்த விலையைக் கொடுத்தேனும் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடிப்பது என்ற முடிவில் பா... கஜ குட்டிக்கரணம் போட்டது.

எப்பொழுதும் இல்லாத வகையில், எட்டு கட்டத் தேர்தலை நடத்தியது எல்லாம் திட்டமிட்ட ஏற்பாடே!

பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மாறி மாறிப் பிரச்சாரம் செய்து பார்த்தனர். திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த முக்கிய மானவர்களைப் பல வழிகளிலும் பா...வுக்கு இழுத்தனர். அதன்மூலம் திரிணாமுல் காங்கிரசைப் பலகீனப்படுத்தலாம் என்று நினைத்தனர்.

ஆனால், முடிவோ தலைகீழாக ஆகிவிட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் பெற்ற இடங்கள் 211

பா... பெற்ற இடங்கள் 72

ஆம்! பாசிச பா...வுக்கு மக்கள் நல்ல பாடத்தைக் கற்பித்துவிட்டனர்.

இது ஒரு தொடக்கமே!

No comments:

Post a Comment