21 ஆம் நூற்றாண்டின் "கரிகாலன்"
பல
நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ கத்தை ஆண்ட சோழ மன்னன் கரிகாலன் காவிரியில் அடிக்கடி பெரு வெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர்
பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக் கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மாகும்.
தற்போதுள்ள
அணைகளில் கல்ல ணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப் பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந் தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத் தகு சாதனையாகப் புகழப்படுகிறது .
மன்னராட்சிக்கு பிறகு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் கட்டப்பட்
டவை மேட்டூர்அணை, முல்லை பெரியாறு அணை, பாபநாசம்
அணை, பேச்சிப்பாறை அணைகள் ஆகும். இதையடுத்து
காங் கிரஸ் ஆட்சிகாலத்தில் குறிப்பாக
பச்சைத் தமிழர் காமராஜர் முதல்வராக
இருந்த போதும். அமராவதி, சாத்தனூர், கிருஷ்ண கிரி, வைகை அணை, பவானிசாகர், திரு மூர்த்தி அணை உட்பட 15 அணைகள் கட்டப்பட்டன.
1967இல்
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. 1967 முதல் 1969 பேரறி ஞர் அண்ணா மறைவு வரை கலைஞர் பொதுத்துறை அமைச்சராக இருந்தார். தமிழகத்தின் நீர்வளம் இந்தியாவின் நீர் வளத்தில் 2 சதவீதம். ஆனால் மக்கள் தொகையில் ஆறரை சதவீதம் இதன் காரணமாக ஓர் இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நீரில் மூன்றில் ஒரு பங்குதான் தமிழகத்தில் ஒருவருக்கு இப்போது கிடைக் கிறது. இதையெல்லாம் சிந்தித்து 1967இல் பதவியேற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் நீர் ஆதாரங்களைப் பெருக்கிட பல்வேறு திட்டங்களை நிறை வேற்றியது. 1967 முதல் 2011 வரை
திமுக அரசு மோர்தானா அணை, சின்னாறு
அணை, தும்பலஹள்ளி
அணை, மருதாநதி அணை, இராமாநதி அணை, சித்தாறு
- 1 அணை, பிளவுக்கல் (பெரியாறு) அணை, கொடுமுடி
அணை, கிருதமால் அணை, இருக்கன்குடி அணை, பொய்கை
அணை, பரப்பலாறு அணை, பொன்னியாறு அணை உட்பட 42 அணைகள் கட்டியுள்ளார்.
காவிரி
டெல்டா விவசாயிகள் பயன் பெறும் வகையில் குறிப்பாக கடைமடைப் பகுதிகளிலும் காவிரி நீர் சென்று பாய்ந்து பாசனம் சிறப்பாக நடைபெற சிற்றாறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவை களையும் தூர்வாரியதோடு மட்டுமல்லாமல்
காவிரியில் வெள்ளக்காலங்களில் வெளி யேறும் உபரி நீரை சேமிக்கும் பொருட்டு கட்டளைப்படுகை அணையை கதவணை யாக உயர்த்தியிருக்கிறார்.
தாமிரபரணியில்
வெள்ளக்காலங்களில் கரைபுரண்டோடி வீணாகக் கடலில் கலந்து விடும் நீரை கன்னடியன் கால்வாயிலிருந்து ஒரு புதியவெள்ள நீர்க்கால்வாய் அமைத்து வறட்சிப்பகுதியான சாத்தான்குளம் மற்றும் திசையன் விளை பயன்பெறும் வகையில் தாமிரபரணி ஆற்றினை கருமேனியாறு மற் றும் நம்பியாற்றுடன் இணைத்திருக்கிறார் கலைஞர் அவர்கள்.
2006- 2011 கலைஞர்
முதல்வராக இருந்த ஆட்சிக்காலத்தில் 1859 இடங்களில் தடுப் பணைகளையும் கட்டியிருக்கிறார்.
தான்
ஆட்சிப்பொறுப்பேற்ற ஒவ்வொரு முறையும் விவசாய வளம் செழித்து விவசாயப் பெருங்குடிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திட அணைகள் பராமரிப்பு, தடுப்ப ணைகள் கட்டுவது, கால்வாய்கள் ஏற்படுத் துவது, குளங்கள் உருவாக்குவது, கதவணை, கால்வாய் புணரமைப்பு, வாய்க்கல்கள் புணரமைப்பு , நீர் பாசன வசதி தொடர்பான எண்ணற்ற திட்டங்களை அறிவித்ததோடு நின்று விடாமல் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி அதனைப் பொதுப்பயன்பாட் டிற்கு கொண்டு வந்து நிறைவேற்றிய அவர் தான் இந்த
21 ஆம் நூற்றாண்டின் கரிகாலன்!
- வழக்குரைஞர்
சோ.சுரேஷ்
No comments:
Post a Comment