கழகத் தலைவரின் இரங்கலும் - ஆறுதலும்!
திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளரான தோழர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களது தம்பி ராஜா (வயது 55) நேற்றிரவு (29.4.2021) 8 மணியளவில் தஞ்சாவூரில் உடல்நலக் குறைவால் காலமானார். நேற்றிரவு 11 மணியளவில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது.
சிறிதுகாலம் உடல்நலக் குறைவுற்று, சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரை இழந்து வாடும் அவரது அண்ணன் குணசேகரன் மற்றும் ராஜாவின் துணைவியார், தங்கை மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்றிரவே தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.4.2021
No comments:
Post a Comment