‘‘இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண்சட்டங்கள் 2020'' நூல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

‘‘இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண்சட்டங்கள் 2020'' நூல் வெளியீடு

விவசாயிகளைக் காப்போம் - மாநில உரிமைகளைக் காப்போம்!

புத்தக வெளியீட்டில் தமிழர் தலைவர் புகழுரை

சென்னை, பிப். 28- "விவசாயிகளைக் காப்போம் - மாநில உரிமைகளைக் காப்போம்!" என்றார் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நூல் வெளியிட்டு - தலைமையுரை

கடந்த 20.2.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற ‘‘இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் 2020'' என்ற தலைப்பில் நீதிபதி .கே.ராஜன் அவர்கள் எழுதிய நூல்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டு தலைமையுரையாற்றினார். அவரது தலைமையுரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

டாக்டர் பி.வி.நாராயணசாமி நாயுடு

சட்டத்தைப்பற்றி சொல்வதற்கு முன்பு, விவசாயிகளின் நிலைமைகளைப்பற்றி நாம் பெரிதாக சொல்லவேண்டியதில்லை. நானே விவசாயப் பொருளாதாரம் பயின்ற மாணவன்தான். பொருளா தாரத்தில். ‘‘அக்ரிகல்சுரல் எகானமிக்ஸ்'' என்று ஒரு தனி பிரிவு உண்டு.

‘‘Elements of Indian Agriculture'' by Dr.B.V.Narayana samy Naidu

ஒரு அற்புதமான புத்தகம். அதுதான் எங்களுக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல் கலைக் கழகத்தில் பொருளாதாரம் படிக்கும் பொழுது  பாடமாக இருந்தது.

டாக்டர் பி.வி.நாராயணசாமி நாயுடு மிகப்பெரிய பொருளாதார நிபுணராவார். பச்சையப்பன் கல்லூரி யில் முதல்வராக இருந்து, பிறகு Forward Marketing Commission   என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மத்திய அரசாங்கத்தில் உள்ள உயர்ந்த பதவிக்குச் சென்றவர்.

அவர் எழுதிய அந்தப் புத்தகம்தான் - சாதாரண மாக நம் ஊரில் என்ன சொல்வார்கள், Is the Bible of  Economics என்று. மத வார்த்தையாக அது இருந்தாலும், அதிலுள்ள முக்கியத்துவம் கருதி!

டாக்டர் .இராமசாமி என்பவர் என்னுடைய ஆசிரியராக இருந்தவர். அவர் ஓய்வு பெற்றவுடன் பெரியார் திடலில் இருந்தார். அவர்  London School of Economics  இல் படித்துவிட்டு, ஆசிரியராகப் பணியாற்றி, இறுதியில் பெரியார் திடலில் தங்கி யிருந்து எங்களுக்கு உதவியாக இருந்தார். அவர் வகுப்பெடுக்கும்பொழுது,  அப்படியே மனதில் எளிதாகப் பதியும்.

உழுதவன் கணக்குப் பார்த்தால்,

உழக்குக்கூட மிஞ்சாது!

விவசாயிகள் என்றைக்கும் மகிழ்ச்சியடைந்ததே கிடையாது. உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக் குக்கூட மிஞ்சாது என்ற பழமொழி நம் நாட்டில் உண்டு.

எங்களுடைய ஆசிரியர் அடிக்கடி சொல்லிச் சொல்லி, எங்களுக்குப் பழகிப் போன விஷயம் என்னவென்றால்‘‘In Indian Agriculture,  Agriculturist   is  Born in debt;  Lives in debt, Dies in debt; bequeaths in debt''  என்று சொல்வார்; ‘‘இந்திய விவசாயி கடனில் பிறக்கிறான்; கடனிலே வாழ்கிறான்; கடனிலே இறக்கிறான்; கடனையே சொத்தாகக் கொடுத்துவிட்டுப் போகிறான் அடுத்து வருகிறவனுக்கு'' இதுதான் விவசாயிகளுடைய நிலைமை.

பயிர்த் தொழில் என்றால்,

அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை

இன்றைக்கு அவர்களுடைய நிலைமை என்ன? ஏதோ கஷ்டப்பட்டு வந்திருக்கிறார்கள். பயிர்த் தொழில் என்றால், அதற்கு முக்கியத்துவம் கொடுப் பதில்லை. காரணம், சூத்திரத் தொழில் அது. கார ணம், ஒரு கூட்டம், இதுவரையில் வயலில் இறங்காம லேயே பெரிய அளவிற்கு வந்துவிட்டார்கள்.

ஆகவே, விவசாயிகளுடைய நிலைமை  கொஞ் சம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால், அவர்க ளுடைய உழைப்புதான் அடிப்படை. ஒவ்வொரு முறையும் கடன்தான். விவசாயிகளின் கடன் தள்ளு படி, விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று ஏன்  சொல்லுகிறார்கள்? அவர்களால் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்பதால்தானே கடன் தள்ளுபடி.

சரி, கடன் தள்ளுபடி ஒரு பக்கத்தில் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் விவசாயத்திற்குரிய பொருள்கள் ஒழுங்காக,   Legitimately  what  he wants is his legitimate  rights - he is not begging with the bowl பிச்சை எடுக்கின்ற வேலையல்ல - உழைப்புக்கேற்ற ஊதியம் எங்களுக்கு வேண்டும். அதனை நாங்களே செய்துகொண்டிருக்கிறோம். அதை மறைமுகமாக  கார்ப்பரேட் முதலாளிகள் வசம் கொடுக்கக்கூடாது என்பதைப்பற்றியெல்லாம் அய்யா நீதியரசர் அவர்கள் இங்கே சொன்னார்.

அதைவிட மிகக் கொடுமையான ஒரு விஷயம் என்னவென்றால், எந்த சட்டத்திலாவது, வழக்கு நீதிமன்றத்திற்கு போக முடியாது என்று சொல்கிற சட்டம் உண்டா?

அப்படி ஒரு சட்டம் எல்லாம் எங்கேயும் கிடையாது என்று தொலைக்காட்சி விவாதத்தில் அரைவேக்காடுகள் சொல்கின்றன.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை

வாழ வைக்கவா? வஞ்சிக்கவா?

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வாழ வைக்கவா? வஞ்சிக்கவா?' என்ற தலைப்பில் ஒரு பகுதி  இருக்கிறது. இந்தப் புத்தகத்தை எல்லா மக்களிடையேயும் பரப்பவேண்டும்.

அய்யா நீதியரசர் அவர்கள் இங்கே சொல்லும் பொழுது, மூன்றாவது நபரை வசப்படுத்துவது பெரிய வர்த்தகங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. அரசு போன்ற ஒரு கட்டுப்பாட்டாளர் இருக்கும்பொழுதே, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. நிலுவைத் தொகை இருக் கின்றன என்ற பிரச்சினைகள் இருக்கின்றன.

ஆனால், என்னாகும்?

இருதரப்பிற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட் டால், சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டை அணுக வேண்டும் என்கிறது புதிய சட்டம்.

அதாவது, ஆர்.டி.. மட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளிடையே வழங்கப்படும் முடிவு, விவசா யிகள் ஏற்கத்தக்கதாக இல்லை என்றால், மேல் முறையீடு செய்ய முடியாது. சட்டத்தில் வழி இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

இது என்ன கொடுமை! இதுவரையில் எந்த சட்டத்திலாவது இதுபோன்று உண்டா?

எனவே, நண்பர்களே! விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றால், அதை விவசாயிகள் பிரச்சினை என்று மட்டும் பார்க் கக்கூடாது. அதனுடைய பரிணாமம் வேறிடத்திற்கு வருகிறது.

மேடையில்அவ்வையார் பாட்டு'

பாடுவதால் பயனில்லை!

மேடைக்கு வந்து, அவ்வையார் பாட்டு பாடுவ தால் பயனில்லை.

‘‘வரப்புயர... நீர் உயரும்...

நீர் உயர... நெல் உயரும்...

நெல் உயர... குடியும் உயரும்...

குடி உயர... கோன்  உயரும்...

என்பதற்கு அடுத்து என்ன?

இவையெல்லாம் உயர...

இப்போது நாட்டில்

பெட்ரோல் விலை உயரும்...

பெட்ரோல் விலை உயர...

கேஸ் சிலிண்டர் விலை உயரும்...

கேஸ் சிலிண்டர் விலை உயர...

வெங்காயம் விலை உயரும்...

வாழை இலை கட்டு உயரும்...

இதைப்பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலை யில்லை. எங்கள் பக்கத்தில் கார்ப்பரேட் முதலாளி களான அதானி, அம்பானிகள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்.

இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல - இங்கே நாம் எடுத்துக்கொண்டிருப்பது அதையும் தாண்டிய - அடுத்த பிரச்சினை மிகவும் முக்கிய மானது.

ஏன் சட்ட நிபுணர்கள், ஏன் அய்யா போன்ற நீதியரசர்கள், ஏன் வழக்குரைஞர் பெருமக்கள், ஏன் ஊடகவியலாளர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இது அறிவார்ந்த அரங்கம் - இந்த புத்தகத்தை நீங்கள் எல்லாம் வாங்கிப் பரப்ப வேண்டும். இரண்டு சங்கதிகள் உண்டு. அடுத்த பரிமாணத்திற்குப் போகவேண்டும். அடுத்தப் பரிமாணம் என்றால் என்ன?

We have to travel to another dimension; which is more important; we are more concerned; with the violation of Constitutional provisions but still our concern is much more.

நம்முடைய கவலை, விவசாயிகளுடைய நல னையும் தாண்டி, இன்னொரு கவலை இருக்கிறது. அதுதான்the defending of our Constitution; defending of our rights  of the State என்பதுதான் மிகவும் முக்கியம்.

அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் பிரமாணம் எடுத்துக்கொண்டுதான் பிரதமர்முதல் அமைச்சர் கள் வரை பதவியில் அமர்ந்துள்ளார்கள்.

இரண்டாவது முறையாக மோடி 

பதவி ஏற்கும்பொழுது என்ன செய்தார்?

நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் சாதாரண மானவர் அல்ல; மற்றவர்கள் அரசமைப்புச் சட்டத் தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். ஆனால், மோடி அவர்கள் பிரதமராகப் பதவி யேற் கும்பொழுது செய்த செயல் உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறோம்; அப்படி நீங்கள் மறந்துவிட்டால், அதனை ஞாபகப்படுத்து வதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்.

பதவிப் பிரமாணத்தின்போது, குடியரசுத் தலை வர் ஒரு தாளைக் கொடுப்பார். அரசமைப்புச் சட் டத்திற்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடப் பேன் என்று ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ அல் லது அவரவர் தாய்மொழியிலோ பதவிப் பிரமா ணத்தைப் படிப்பார்கள்.

இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்பின் போது, மேடையிலிருந்து மோடி இறங்கிப் போனார்? எங்கே போகிறார் என்று எல்லோரும் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, அங்கே அரசமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு இருந்தது; அதனருகில் சென்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுத்தான் மேடைக்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

அந்த அரசமைப்புச் சட்டம்தான் - இந்திய  அரசமைப்புச் சட்டம். எந்த ஆட்சியாக இருந் தாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.

மாநில உரிமைகளைக் கபளீகரம் செய்துவிட்டது

இப்பொழுது இருக்கின்ற கவலை, வேளாண் சட்டங்கள் எந்த அளவிற்குப் போயிருக்கிறது என் றால், மாநில உரிமைகளைக் கபளீகரம் செய்துவிட்டது.

It has encroached the Centre has encroached the States rights; which is guaranteed by our Constitution of India. It is not by mere  Law; Constitution is you further mental one. men man come and  men may go - Prime Ministers may come; Prime Ministers may go - Governments may come; Governments may go; But Constitution remains forever  and  ever to defend our democracy; that is our duty for all of us to save the democracy.  We will have to save our Constitution that is more important which very clearly says - We, the people of  India having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC these five elements.

மேற்கண்ட நான்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களில் இருக் கிறதா? என்றால், இல்லை.

இந்தியா கூட்டாட்சிதான் - இதை நாம் சொல்ல வில்லை;  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூறு என்ன தெரியுமா?

‘‘Is not the Constitution states that India, that is Bharat, shall be a Union of States.''  கூட்டாட்சி அல்லவா?

ஆகவே, நமக்கு  நாமே உருவாக்கிக் கொண்டி ருக்கின்றோம். நமக்கு நாமே அது சிதைவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? என்பதுதான் இப்போதைய கேள்வி.

அந்த வகையில் நண்பர்களே,

 ஒரு பட்டியல் யூனியன் பட்டியல்; இன்னொரு பட்டியல் மாநிலப் பட்டியல்; இன்னொரு பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் (கண்கரண்ட் பட்டியல்).

பொதுப்பட்டியல் என்று பிரிப்பார்கள்; அது கூடாது என்றவுடன், இப்பொழுது ஒப்புக்கொண்டு உள்ளார்கள். ஒத்திசைவு பட்டியல்தான் என்று.

பட்டியலை ஏன் பிரித்திருக்கிறார்கள்?

Executive, Legislature, Judiciary, Media

ஆகவே, நான்கு தூண்களில் மூன்று அம்சங்கள் மிகவும் முக்கியமானதாகும்Separation of Powers  என்பது Federal Structure இல்தான் இருக்கும்.

ஒருவர், இன்னொருவருடைய இடத்தை ஆக் கிரமிக்கக் கூடாது. நம்முடைய அறிவுக்கரசு அவர் கள் டி.ஆர்.. இருந்து ஓய்வு பெற்றவர். ரெவின்யூ துறையில் நீண்ட நாள்களாக பணியில் இருந்தவர்.

மத்திய அரசே ஆக்கிரமிக்கலாமா?

ஆக்கிரமிப்புக் கூடாது' என்று சொல்லுகின்ற பொழுது, மத்திய அரசே ஆக்கிரமிக்கலாமா? மிக முக்கியமாக அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவி யேற்றவர்களே இதனை செய்யலாமா?

ஆகவேதான், மாநில அரசினுடைய அதிகாரத் தில் இருப்பது  விவசாயம்.   மாநில அரசு எப்படி இருக்கவேண்டும்? ‘‘உறவுக்குக் கை கொடுக்க வேண்டும் - உரிமைக்குக் குரல் கொடுக்கவேண்டும்'' என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மிக அழகாக சொன்னார்.

மத்திய அரசோடு சண்டை போட்டுக் கொண்டி ருக்கவேண்டிய அவசியமில்லை. உரிமைக்குக் குரல் கொடுக்கவேண்டும்.

அது நம்முடைய முதலமைச்சருக்கோ அல்லது இங்கே இருக்கின்ற கொத்தடிமை ஆட்சிக்கோ தெரியவில்லையே! நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு,

தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் -

வாயும், வயிறும் வேறு.

அதுபோன்று, மத்திய அரசு - மாநில அரசு என்பது வேறு, வேறு. என்னதான்  ஒருமைப்பாடுபற்றி பேசி, நம்முடைய பாக்கெட்டுக்குள் கையை விட்டு எடுத்துக் கொண்டிருந்தார் என்றால், நாம் சும்மா இருக்கவேண்டுமா? முடியுமா?

‘‘பை என்னுடையது; கை உங்களுடையது!''

நிறைய கூட்டங்களில் இதை சொல்லியிருக்கின் றோம், ‘‘நாம் இரண்டு பேரும் சகோதரர்கள் அல் லவா - நாம் எல்லோரும் ஒன்றல்லவா - நமக்குள் ஒரே பார்வைதானே'' என்று சொல்லிக்கொண்டு நம்முடைய சட்டை பைக்குள் கையை விட்டால் என்ன சொல்லவேண்டும்; சிரித்துக்கொண்டே, ‘‘பை  என்னுடையது; கை உங்களுடையது'' என்று ஞாபகப்படுத்தவேண்டாமா?''

இதுதான் மிக முக்கியமான அடிப்படையாகும். எனவே, மாநில அரசினுடைய உரிமைகள் பறிக்கப் பட்டு இருக்கின்றன. இந்த சட்டங்களுக்கு எப்படி ஆளுங்கட்சி வாக்களித்தது? இந்த சட்டங்களால் யாருக்கும் பாதிப்பில்லை என்கிறார் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள்.

என்னென்ன  பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கே தமிழில் வெளியிடப்பட்ட புத்தகத்தை வாங் கிப் படியுங்கள்; உங்களுடைய உரிமைகளுக்காக யார் வாதாடுவது? ஒரு மாநில அரசு வாதாட வேண்டாமா? அநியாயத்திற்கு நீங்கள் துணை போகலாமா?

ஆகவே நண்பர்களே, மிக முக்கியமாக உங்க ளுக்குச் சுட்டிக்காட்டவேண்டியது என்னவென்றால்,

ஒற்றை அமைப்பாக இந்த நாடு இல்லை. பன் முகத் தன்மை கொண்டது. ஒவ்வொரு மாநிலங்க ளிலும் ஒவ்வொரு மாதிரியான விவசாயம். வெவ் வேறு தன்மை. ஆகையால்தான், விவசாயத்தை மாநிலப் பட்டியலில் வைத்தார்கள்.

மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்!

அந்தந்த மாநிலங்களில் நுணுக்கமான வித்தியா சங்கள் உண்டு. தேயிலை பயிர் விளையும் இடங் களுக்கும், விவசாயம் செய்யும் இடங்களுக்கும் அல்லது ரப்பர் தோட்டம் இருக்கும் இடங்களுக்கும் அல்லது புஞ்சை நஞ்சை விளைகின்ற இடங்களுக் கும் வேறுபாடு உண்டு.

கோதுமைக்கு ஒரு விலை கொடுக்கிறோம்; நெல்லுக்கு இன்னொரு விலை கொடுக்கிறோம். சப்பாத்தி சாப்பிடுகிறவர்க ளுக்கு கோதுமை அவ சியம். அரிசி சாப்பாடு சாப்பிடுகிறவர் களுக்கு நெல் அவசியம்.

ஒரே இந்தியா என்று சொல்ல முடியுமா?

இனிமேல் சப்பாத்தியை தவிர வேறு எதையும் சாப்பிட முடியாது; ஒரே இந்தியா என்று சொல்ல முடியுமா? என்பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

ஆகவே, நண்பர்களே! மாநில அரசினுடைய உரிமை களைப் பாதுகாக்கவேண்டும். எல்லாவற்றையும்விட விவசாயி களுடைய உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்.

நீதியரசர் அய்யா அவர்கள் இங்கே மிக அழகாக சொன் னார், ‘‘நிலத்தை விற்றுவிட்டு, கடைசியில் யாரிடம் கூலிகளாகப் போகப் போகிறோம்; அதே கார்ப்பரேட் முதலாளிகளிடம் கூலிகளாகத்தான் போகவேண்டும்'' என்றார்.

நம் நாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள், தன்னுடைய சொந்த நிலத்தின்மீது, நிலச்சுவான்தார்களிடம் கடன் வாங்கியதால், பிறகு தன்னுடைய சொந்த நிலத்தை நிலச்சுவான்தாரரிடம் கொடுத்துவிட்டு, அந்த நிலத்திலேயே கூலிக்காரராக வேலை செய்வார்.

அந்தச் சூழல்தான் இன்றைக்கு நம்முடைய நாட்டில் வரவிருக்கிறது. அதுதான் விவசாயிகளின் தீராத கவலை.

மக்களாட்சியா? அல்லது எதேச்சதிகார ஆட்சியா?

விவசாயிகள் பிரச்சினைகள் என்பதைத்தாண்டி, இது மாநில உரிமை பிரச்சினை - அதையும் தாண்டி, இது மக்களாட் சியா? அல்லது எதேச்சதிகார ஆட்சியா?

நம்முடைய  அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படவேண்டும் - அதில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள்  மக்களுக்கு அளிக்கப் படவேண்டும் அல்லவா!

இவையெல்லாம் இங்கே வெளியிடப்பட்ட புத்தகங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை நீங்கள் வாங்கிப் படியுங்கள்!

விவசாயிகளைக் காப்போம் -

மாநில உரிமைகளைக் காப்போம்!

இந்த நெருக்கடியிலும் நீங்கள் எல்லாம் இங்கே வந்து சிறப்பாக இந்நிகழ்ச்சியை நடத்தியமைக்காக உங்கள் அனை வருக்கும் நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

காப்போம்,  காப்போம்!

விவசாயிகளைக் காப்போம்!

வேளாண்மையைக் காப்போம்!

மாநில உரிமைகளைக் காப்போம்!

அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை சிதைப்பதற்கு ஒரு போதும் நாம் அனுமதிக்கமாட்டோம்; காரணம், தேவையற்ற தைக் கண்டிப்பது என்பது வேறு; ஆனால், அது அளித்திருக் கின்ற உரிமைகளைப் பாதுகாக்கவேண்டாமா?

அதானியும், அம்பானியும் சோசலிசத்தைக் கொண்டு வரமாட்டார்கள்!

ஜனநாயகம் என்பதைக் காப்பாற்றவேண்டும் - சோசலிசம் என்பதைக் காப்பாற்றவேண்டுமானால், அதானியும், அம்பானி யும் சோசலிசத்தைக் கொண்டு வரமாட்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்து, மக்களிடம் விளக்கவேண்டும் என்று கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment