பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு வினாடி வினா விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 31, 2020

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு வினாடி வினா விருது

திருச்சி, டிச. 31- கரோனா காலகட் டத்திலும் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் இணையவழி கருத்தரங்கம், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல், வினாடி வினா போன்ற  பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பாராட்டுச்சான் றிதழ்கள், நினைவுப்பரிசுகள் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து வரு கின்றனர். அதன் தொடர்ச்சியாக பஞ்சாப் மாநிலம் சித்கரா மருந்தியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம், இந்திய மருந்தியல் கூட்டமைப்பு (IPA) மற்றும் இந்திய மருந்தியல் ஆசிரியர்கள் கூட்டமைப்பு (APTI) இணைந்து 25.07.2020 அன்று பன் னாட்டு வினாடி வினா விருதிற்கான போட்டியை நடத்தியது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் மாணவர் செ. இருதயசாமி தென்மண்டல அள வில் இரண்டாம் பரிசினை வென் றுள்ளார். அதுமட்டுமல்லாமல் மகா ராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜிராவ்ஜி கரான்ஜிகர் மருந்தியல் கல்லூரி நடத்திய இணைய வழி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தலில் மூன்றாம் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் பெற்று  கல்லூரிக்கு பெருமை சேர்த் துள்ளார். 

பன்னாட்டு அளவில் பரிசு வென்ற மாணவரை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரி யர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித் துக் கொண்டனர்.

No comments:

Post a Comment