லயோலா கல்லூரி ஆய்வில் தகவல்
சென்னை,டிச.31, புதிய கரோனா வைரசை கபசுர குடிநீர் கட்டுப்படுத்தும் என்று சென்னை லயோலா கல்லூரி நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. லயோலா கல்லூரி பேராசிரியர்கள் வின்சன்ட், முனைவர் மனோஜ் தன்ராஜ் ஆகியோர் கூறியதாவது:
கரோனாவை கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர் முக்கியப் பங்காற்றி உள்ளது. அனைத்து வைரஸ் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்க கபசுர குடிநீர் பெரிதும் உதவி யுள்ளது. வைரசின் வீரி யத்தை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் கபசுர குடிநீரில் உள்ளது. உரு மாறிய கரோனா வைரஸ் பாதிப்பையும் கபசுர குடிநீர் கட்டுப் படுத்தும் இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment