சகோதரர் டாக்டர் ஜெகத்ரட்சகன் எம்.பி., துணைவியார் திருமதி அனுசுயா அவர்கள் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

சகோதரர் டாக்டர் ஜெகத்ரட்சகன் எம்.பி., துணைவியார் திருமதி அனுசுயா அவர்கள் மறைவு

திராவிடர் கழகத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்

பாரத் நிகர் நிலைப் பல்கலைக் கழக நிறுவனரும், திராவிட முன்னேற்றக் கழக முன்னணி செயல்வீரரும், அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் மத்திய இணையமைச்சர் முனைவர் கா.ஜெகத்ரட்சகன் அவர்களது துணைவியார் திருமதி அனுசுயா (வயது 68) அவர்கள் உடல்நலக் குறைவினால் இன்று (15.12.2020) காலை காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.

அவரைச் சந்திக்கும்போது, அவரது இல்லத்தில் இவரையும் அறிமுகப்படுத்தி வைப்பார் நண்பர் ஜெகத்ரட்சகன். அன்புடன் விசாரிக்கத் தவறாதவர். அந்தக் குடும்பத்தின் விளக்காக அமைந்து,  பிள்ளைகளையும் வளர்த்து, நண்பர் ஜெகத்ரட்சகன் அவர்களையும் நன்கு பேணிப் பாதுகாத்த இல்லத்தரசியார் அவர்.

அவரது மறைவால் வருந்தும் சகோதரர் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், பிள்ளைகள் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பிலும், நம் சார்பிலும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

15.12.2020

No comments:

Post a Comment