நாளமில்லாச்சுரப்பிகளைப் பாதிக்கும் உணவு முறைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 14, 2020

நாளமில்லாச்சுரப்பிகளைப் பாதிக்கும் உணவு முறைகள்

பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் மற்றும் இறைச்சி போன்வற்றில் உள்ள கொழுப்பு நாளமில்லாச்சுரபிகளின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். "நாம் பாதுகாக்கப்பட்ட செயற்கை உணவுப் பொருட்கள் என்று நினைத்துக் கொண்டு சாப்பிடும் பொருட்கள்  உடல் பருமனை அதிகரிக்கும். இவற்றில் உள்ள சில பொருட்கள்    உடலின் ஹார்மோன்களின் செயல்பாட்டை குழப்பமடையச்செய்யும். இதன் மூலம் உடற்பருமனும் நீரழிவு நோயும் ஏற்படுகின்றன" என்று கூறியுள்ளனர்.


பதப்படுத்தப்பட்ட உணவுகள் செரிக்கப்பட்டு உடற் செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. இதன் மூலம் செல்லில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஹார்மோன் உற்பத்தியை பாதித்து உடற்பருமன் மற்றும் நீரழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.  இது தொடர்பாக  ஹாவர்ட் டி எச் சான் மருத்துவக் கல்வி நிறுவனத்தின் மரபியல் மற்றும் செரிமானம் தொடர்பான நோய்ப்பிரிவு தலைவர் கோகன் எஸ் ஹாடமிச்ல் கில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.


 இவரது தொடர் ஆய்வில் சில குறிப்பிட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.  இயற்கை யான உணவில் பாதுகாப்பான கொழுப்புப் பொருட்கள்   அதிகம் உள்ளது. அப்பொருட்களை உடல் எளிதில் ஏற்றுக் கொண்டு உடலியக்கத்தைச் சீராக்குகிறது.


  இதர உணவுகளான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் புரோப்பியோனேட்டு கொழுப்புகளின் மூலக்கூற்றில் பல் வேறு சிதைவுகள் ஏற்படுகின்றன, இவ்வாறு சிதைந்த கொழுப்பு கள் பியர், சத்துபாணம், உணவுகட்டுப்பாட்டிற்கான உணவுகள், பாக்கெட்டுகளில் உப்பிடப்பட்டு விற்கும் பொறித்த உருளைக்கிழங்கு சிப்ஸ்கள், வறுத்த கொட்டைகள் மற்றும் உணவில் பயன்படும் வினிகர் போன்றவற்றில்  உள்ளன.


பதப்படுத்தப்பட்ட  உணவுகளில் காணப்படும் புரோப்பி யோனேட்டுகளை ஆய்வு செய்த போது இவை நாளமில்லாச் சுரப்பி மற்றும் நரம்பு மண்டலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்து கின்றன, அனிச்சை செயல்பாடுகளில் இயங்கும் இதயம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்பட்டையும் பாதிக்கிறது.


இவை இயற்கைக்கு மாறாக ஹார்மோன்களின் செயல் பாட்டை வேகப்படுத்துகின்றன. இது விலங்குகளின் மூலம் நடத்தப்பட்ட சோதனைகளில் உறுதி செய்யப்பட்டது. ஹார் மோன்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும் போது உட லில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரழிவு நோய் ஏற்படுகிறது. மேலும் புரோப்பியோனேட்டு வகை வளர்சிதை மாற்றக் கொழுப்பு உடற்பருமனையும் அதிகரிக்கிறது.


 ஏற்கனவே கூறியதைப் போல் நாளமில்லாச்சுரப்பிகளைப் பாதிக்கும் வளர்சிதை மாற்றமடைந்த புரோப்பியோனேட் கொழுப்பு, வணிக ரீதியாக அதிகம் விற்பனைசெய்வதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களில் காணப்படுகிறது. இது சாதாரணமாக இயங்கும் நாளமில்லாச்சுரப்பிகளின் செயல்பாட்டைப் பாதித்து வேதி மாற்றத்தை உருவாக்கிவிடு கிறது. நாளமில்லாச்சுரப்பிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக வும் முக்கிய காரணியாக உள்ளன. இவை பாதிப்பு அடையும் போது உடல் நிலை தொடர்ந்து சீர்கெட ஆரம்பிக்கும் என்று பால்டிமோர் மெட்ஸ்டார் மருத்துவமனை நாளமில்லாச் சுரப் பிக்கான சிறப்பு மருத்துவர் மன்சுர் எ சோமாலி கூறினார்.


No comments:

Post a Comment