ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 28, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:



  • அய்தராபாத் மாநகராட்சி தேர்தலில் மக்கள் பிரச்சினை களைப் பற்றி பேசாமல், மதம், ஜின்னா, பாகிஸ்தான் என பாஜக பேசுகிறது. இதனால் அய்தராபாத் மக்களுக்கு என்ன பயன்? என டி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.சி. கவிதா குற்றம் சாட்டி யுள்ளார்.

  • காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முன்னாள் முதல்வர் மெகபூபா தான் மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.


டெக்கான் கிரானிக்கல், சென்னை:



  • உடல் உறுப்பு தானம் செய்வோர்க்கு அரசு வேலையில் முன்னுரிமை தர யோசித்து வருவதாக தமிழ் நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  • தமிழ் நாட்டில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எழுதும் கடிதங்களுக்கு ஹிந்தியில் பதில் அளிக்காமல், ஆங்கிலத்தில் பதில் அளிக்க உத்தரவிடுமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வெங்கடேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  • மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியான மாநில விவசாயிகள் தெற்கு தில்லியில் காவல் துறை ஒதுக்கிய மைதானத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் துவங்கியுள்ளனர். தங்களது போராட்டம் அகில இந்திய போராட்டமாக மாறி வருகிறது என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • கரோனா தொற்றுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் ரூ.20 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது.

  • மத்திய பாஜக அரசு புலன் விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது தவறாக பயன்படுத்தி வருகிறது. தனது அமைதியையும், அடக்கத்தையும் கீழ்படிதல் என பாஜக தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.


லிங்காயத் சமூகத்தை ஓபிசி பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்ற கோரிக்கையினை முதலில் பரிசீலிக்க எண்ணிய கர்நாடக மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியதை தொடர்ந்து, அந்த எண்ணத்தை கை விட்டுள்ளார். பின்னர் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.


தி டெலிகிராப்:



  • மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் தில்லி நோக்கி வருவதற்கு தடையை ஏற்படுத்திய அரியானா அரசு பின்னர் மத்திய அரசின் தலை யீட்டில் அனுமதி அளித்தது.

  • சீன நாட்டைச் சேர்ந்த எம்.ஜி. மோட்டார் நிறுவனம் நடத்திய பாட்டரி கார் நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் தலைமை அதிகார் பிபின் ராவட் மற்றும் மத்திய பாஜக அமைச்சர் பாகன்சிங் குலஸ்தே மற்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீன ராணுவம் நமது ராணுவ வீரர்களை கொன்று, எல்லையை ஆக்கிரமிக்கும் நிலையில் சீன நிறுவன நிகழ்ச்சியில் தலைமை ராணுவ அதிகாரி கலந்து கொள்ளலாமா? என காங்கிரஸ் தலைவர் அபிசேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.


தி இந்து:



  • நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ சிறப்பு மேல்படிப்பில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இட ஒதுக்கீடு இல்லாமல் இந்த ஆண்டு மருத்துவ மேல்படிப்பு இடங்களை நிரப்பிடவும் உத்தரவிட்டுள்ளது.


பி.பி.சி. நியூஸ் தமிழ்:


இந்திய அரசின் விவசாய சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை வழிநடத்தும் இவரது பெயர் சுர்ஜித் கவுர். இவருக்கு 85 வயதாகிறது.


குடந்தை கருணா


28.11.2020


No comments:

Post a Comment