மும்பை, நவ. 30- கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதியன்று நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டது. இதனால் இந்தியாவில் அயல்நாடு மற்றும் உள்நாட்டு விமானப் போக்கு வரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன்பின் சில மாதங்களில் உள்நாட்டு விமானப் போக்குவரத் துக்கு மட்டும் படிப்படியாக அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பன்னாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை இன்னும் தொடரு கிறது. அரசு அனுமதியுடன் சில விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பன்னாட்டு விமானங்களுக்கான தடை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும், பன்னாட்டு சரக்கு விமானங்களுக்கும், டிஜிசிஏவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விமானங்களுக்கும் தடை இல்லை என தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
இதுகுறித்து விமானப் பயணக் கட்டுப்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பன்னாட்டு பயணிகள் விமான சேவை களுக்கான தடை டிசம்பர் 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங் களும், பல்வேறு நாடுகளுடனான உடன்படிக்கைகளின் கீழ் இயக்கப்படும் விமானங்களும் தொடர்ந்து இயங்கும்.
No comments:
Post a Comment