அடுக்குமாடியில் வளரும் சிங்கக்குட்டிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 14, 2020

அடுக்குமாடியில் வளரும் சிங்கக்குட்டிகள்


பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டத்தில், துள்ளி விளையாடும் சிங்கக் குட்டிகள் இரண்டு, எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.  மொட்டைமாடியில் உள் தண்ணீர்த் தொட்டிகளில் துள்ளிப்பழகும் சிங்ககுட்டிகளோடு விளையாட பலர் சிறுவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.


 உணவக உரிமையாளராக ஆடோவர் எதிர்காலத்தில் சொந்தமாக ஒரு வனவிலங்கு காட்சியம் அமைக்கும் திட்டத்தோடு சிங்கக் குட்டிகளை வளர்க்கத்  துவங்கியுள்ளார்.


அவர் விலங்குகளை கையாள்வதில் திறமையானவர் இல்லை. இருப்பினும் அவர் ஆர்வத்தோடு இருக்கிறார். இது குறித்து விலங்கு ஆர்வலர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகினறனர். இதுதொடர்பாக ரய்டர் செய்தி நிறுவனத்திடம் பேசிய விலங்கு ஆர்வலர்கள் கூறும் போது வனவிலங்குகள் குட்டிகளாக இருக்கும் போது அதன் தன்மையில் மாற்றம் தெரியாது ஆனால் வளர வளர அது ஆபத்தான ஒன்றாக மாறும் ஆகவே உடனடியாக ஆடோவரிமிருந்து அரசு சிங்க குட்டிகளை வாங்கி அவற்றை வனத்தில் கொண்டு விடவேண்டும்,  ஆறு மாதங்களானதும், சிங்கக் குட்டிகளின் தசைகள் வலிமை பெறுவதால் அவை மனிதர் களைத் தாக்கக்கூடும் என்றும்  நகர்ப்புறத்தில் வாழும் சிங்கங்களுக்குச் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


ஆனால் இதுதொடர்பாக ஆடோவர் கூறும் போது “நாங்கள் அன்போடு பழகுகிறோம், ஆகவே இதே சூழலில் குட்டிகள் வளர்ந்தால் எங்களோடு நட்பாக இருந்துவிடும்" என்று கூறினார்.


அரபு நாடுகள் மற்றும் பாலஸ்தீனம் எகிப்து போன்ற நாடுகளில் சிங்கம் புலி சிறுத்தை போன்ற விலங்குகளை பாதுகாப்பாக வளர்க்க சிறப்பு அனுமதி உண்டு சில அரபு பெரும் பணக்காரர்கள் நூற்றுக்கணக்கான சிங்கங்களை தங்களில் ஆடம்பர இல்லங்களில் சிறப்பு கூண்டுகள் அமைத்து வளர்த்து வருகின்றனர். அவற்றிற்கு நாள்தோறும் இந்திய ரூபாய் மதிப்பில் லட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாய் செலவழிக் கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment