புதுடில்லி, நவ.1 மத்திய தகவல் ஆணையராக ஊட கவியலாளர் உதய்மகுர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். உதய் மகுர்கர் பல முக்கிய செய்தி ஊடகங்களின் பங்குதாரர் ஆவார். இவரது நியமனம் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
மோடி ஆட்சிக்கு வரு வதற்கு முன்பு அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பிரதமராக அறிவிக்கப்பட் டது முதல் இரவும் பகலும் பெரும்பாலான வட இந்திய ஊடகங்கள் இந்தியாவை மீட்கவந்தவர் என்ற ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பரப்பிக்கொண்டே வந்து பெரும்பாலான மக்களிடையே மோடி தான் இந்தியாவிற்கான பிரதமர் என்ற பிம்பத்தை உருவாக்கியது, இது ஒரு திட்டமிட்ட பரப்புரை ஆகும். இதை மும்பையில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘இண்டியா டுடே' ஊட கத்தின் கருத்தரங்கம் ஒன்றில் பல பெரும் ஊடகவியலாளர்களே ஒப்புக்கொண்டனர்
மோடியை மக்கள் மத் தியில் கொண்டு செல்வதற்கு அனைத்து ஊடகங்களுக்கும் வழிகாட்டியாக இருந்தவர் களுள் முக்கியமானவர் உதய மகுர்கர். இவர் மோடிக்கு மிகவும் நெருங்கிய நண்பர். குஜராத்தைச் சேர்ந்தவர். மோடி முதல்வராக இருக்கும் போது கூட தேசிய ஊடகங்களில் ‘மோடியின் குஜராத்' என்ற போலியான மாயை பரவ காரணமானவர் இவர் தான். இவர் 2017-ஆம் ஆண்டு ‘‘மோடியுடன் கோடிக்கணக்கான மக்கள்'' என்ற தலையணை அளவுக் கான நூலை எழுதி, மோடி கையாலேயே வெளியிட்டார்.
இந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற அய்.எப்.எஸ். அதிகாரி யஷ்வர்தன் குமார் நியமிக்கப்படுவதாக பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென அவரது பெயர் நீக்கப்பட்டு, உதய் மகுர்கர் பெயர் முன்மொழியப்பட்டு, அவருக்கு ஆணையர் பதவியும் வழங்கப்பட்டுவிட்டது. இந்தப் பதவிக்கு முன்னாள் அய்.எப்.எஸ். அதிகாரி யஷ்வர்தன் குமார் மற்றும் கேரளா முன்னாள் நிதித் துறைச் செயலாளர் போன்ற பல மூத்த அனுபவமிக்க, ஓய்வு பெற்ற அதிகாரி கள் விண்ணப்பித்த நிலையில், இந்தப் பத விக்கு விண்ணப்பமே செய்யாத உதய்மகுர்கரை நியமித்துள்ளனர்.
இவர் ஆரம்பம் முதலே தீவிர இந்துத்துவ ஆதரவாளர். ஊடகவியலாளர் என்ப தாலும், மோடியின் மீது நாட்டமும், பாரதீய ஜனதா கட்சியின் மீதான ஆதரவும்தான் இவருக்கு இந்தப் பதவியைத் தேடித் தந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ்.
நரேந்திர மோடி தலைமையிலான குழு, மத்திய தகவல் ஆணையர்களை தேர்வு செய்துள்ளது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு 139 விண்ணப்பங்களும், தகவல் ஆணையர்கள் பதவிக்கு 355 விண்ணப்பங்களும் வந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment