சென்னை, நவ. 28- அசோசி யேஷன் ஆப் சதர்ன் ஸ்டோன் இன்டஸ்டிரீஸ் சார்பாக மதுரை கிரானைட் வழக்கு கள் சம்மந்தமாக அதன் தலை வர் ராஜசேகரன் மற்றும் நிர் வாகிகள் கூட்டாக செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
கிரானைட் குவாரி வழக்கு சம்மந்தமாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து உண்மை நிலையை கண்டறி யும் பொருட்டு மத்திய அர சின் சுரங்கத்துறையைச் சேர்ந்த ஜியோலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவை எதிர்மனுதாரராக சேர்த்து கருத்துரு கேட்டதன் பேரில், உயர்நீதிமன்றத்தில் ஜி.எஸ்.அய். தாக்கல் செய்த பதிலுரை யில் மதுரை மேலூர் கிரா னைட் குவாரிகளை ஏற்க னவே ஆய்வு மேற்கொண்டது.
அதன்படி அனைத்து அம் சங்களும் பொருந்தியிருந்தால் 35 சதவிதம் முதல் 40% வரை விற்பனைக்கு உகந்த ரெக்கவரி கிடைக்குமென்றும் இவற்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட் டால் ரெக்கவரி சதவிகிதம் குறையுமென்றும், கிரானைட் கழிவுகளை லீஸ் வழங்கப் பட்ட பகுதியிலிருந்து 3 கி.மீ சுற்றளவில் வைத்துக்கொள் ளலாம் என கூறியுள்ளது.
மற்ற மாநிலங்களில் விதி மீறல் குற்றச்சாட்டு உள்ள தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையிலும் தொழில் நடைபெற்று வருகி றது. இதன் மூலம் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் எவ்வித இடையூறுமின்றி செயல்பட அரசால் முறைப் படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பல்லாயிரக்கணக் கான கிராமப்புற தொழிலா ளர்களின் வேலைவாய்ப்பு, அந்நிய செலவாணி இழப்பு, மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய ராயல்டி இழப்பு ஆகியவைகளை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத் தில் கிரானைட் தொழிலுக்கு புத்துயிர் அளித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment