மனு, தன்னுடைய சட்டப் புத்தகத் தில், ஒரு சிலருக்காக அவர்கள் ஆதிக்கம் செலுத்தவும், புனிதமானவர்களாகக் கருதப்படவும் சில நியதிகளை உருவாக்கியுள்ளார். உயர்ந்த வாழ்க்கை வாழவும்அவர்களுக்குச் சில கொள்கைகளை வகுத்திருக்கிறார். இது நிறைவேற வேண்டுமென்றால், சட்டத்தின் பிரிவுகள் மறைமுகக் கட்டளைகளாகத் தானி ருக்க முடியும்; ஒவ்வொரு புனிதமான பொய்யின் நோக்க மும் இதுதான்....
------------ பிரடெரிக் நியட்சே
மனு, தன்னுடைய நூலில் இந்தியாவின் சமுதாய, ஒழுக்க நெறிகளைப் புனிதமான முறையில் தொகுத்து, மனித வர்க்கத்தின் மேம்பாட்டிற்காகவே, தந்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் உண்மையில், இந்த மனு தர்ம நூல் ஜாதிவெறியும், ஆண் பெண் உறவு பற்றிய தவறான கருத்துகளையும் புகுத்தவே எழுதப்பட்டுள்ளது. பிற ஜாதியினருக்குக் கொடுமையான தண்டனைகளையும், குரூரமான சித்திரவதைகளையும், சமுதாய மக்களை ஒன்று சேரவிடாமல், சிலருக்கு ஏகபோக உரிமைகளையும் பலருக்கு அடிமைகளின் வாழ்க்கையையும் தந்து, எழுதி யுள்ளார். மற்ற ஜாதிக்காரர்களை இழிவுபடுத்தியும், கண்டித்தும் பல பகுதிகளில் குறிப்பிடுகிறார். இந்த நூலை எழுத தன் சொந்த முடிவுகளையே எடுத்துக் கொண்டுள்ளார். இந்த முடிவுகள், உலகம் படைக்கப்பட்ட போதே கடவுள் களால் தரப்பட்ட, காலத்தால் அழியாத கட்டளைகள் என்கிறார். மனுஸ்மிருதி என்ற இந்த நூல், முதன்முதலாக மனிதர்களுக்குப் புரியும் மொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாகவும் கூறுகிறார்.
1794இல் ஆங்கில மொழியிலும், 1797-இல் ஜெர்மன் மொழியிலும், 1833-இல் பிரெஞ்சு மொழியிலும், 1859இல் போர்ச்சுக்கீசிய மொழியிலும் இந்த மனுதர்ம சாஸ்திரம் மொழிபெயர்க்கப்பட்டது.
1886இல் ஜார்ஜ் பக்ளர் என்பவர் மனுவின் சட்டங்கள் என்ற தலைப்பில் (ஆக்ஸ்போர்டு பிரஸ்) இந்த நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். மீண்டும் 1988இல் இந்த நூல் மோதி-லால் பனார்சிதாஸ் என்பவரால் பதிப்பிக் கப்பட்டது. மனுஸ்மிருதி முதலில் பிரம்மாவிடமிருந்து ஆரம்பித்து அதன் சாராம்சங்கள் மனுவிடம் கூறப்பட்ட தாகவும், அதை அறிந்துகொண்ட மனு, அவற்றை முனி வர்களிடம் கூறியதாகவும் எழுதப்பட்டுள்ளது. மனுவில் மூளையிலிருந்து பிறந்த பத்து மக்களில் ஒருவரான பிருகு என்பவர் உலக உற்பத்தி எவ்வாறு நடைபெற்றது என்ப தைப்பற்றி மனுவின் விளக்கத்தை விரிவாகக் கூறுகிறார். பக்ளர் கூறுவதைப் போல, மனு முதலில் மன்வந்தராஸ் (ஏழு மனுமுனிவர்களின் காலம்) என்பது பற்றியும், யுகங்கள் (உலகத்தின் நான்கு - காலங்கள், கிருத, திரேதா, துவாபர, கலியா என்பதைப்பற்றியும் கூறுகிறார். மேலும், யுகங்களின் மற்ற பிரிவுகளைப் பற்றியும், அடுத்தபடியாக முக்கியமான நான்கு ஜாதிகளைப்பற்றியும் (வர்ணங்கள்), அதற்குப்பிறகு பிராமணர்களின் மகாத்மியத்தைப் பற்றியும் மனுவின் புனித சட்டமான மனுஸ்மிருதியைப்பற்றியும், தனக்கு நேரடியாகக் கூறப்பட்டதை அப்படியே கூறுவதாகவும் ஒப்புவித்துவிட்டு நூலை முடிக்கிறார்.
1991இல், வெண்பிடோனிகர், பிரியன் கே.ஸ்மித் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பில் 2685 செய்யுட்படல்கள் தரப்பட்டுள்ளன. பல ஜாதி மக்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளைகளைப்பற்றியும், வாழ்நாள் முழுவதும் அவர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஓர் அரசன் எப்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்பதைப் பற்றியும், பல ஜாதிகளைச் சேர்ந்த மக்களிடையே உள்ள ஆண்களின் பெண்களின் உறவு முறைகளைப்பற்றியும், இன்னும் அழுத்தமாகக் கணவன் மனைவி உறவைப்பற்றியும், பிறப்பு, மரணம், கர்மா, சடங்குகள், மறுபிறவி மற்றும் இறுதி வாழ்க்கைப் பற்றியும் கூறியுள்ள இந்த நூலை உலக வாழ்க்கையைப் பற்றியும், உலகத்தில் பல ஜாதியினர் எவ்வாறு வாழ வேண் டும் என்பது பற்றியும் பல நெறிமுறைகளைத் தருவதாக மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இவர்கள், தங்களுடைய மேற்கத்திய கண்ணோட்டத் தில், இதற்கு இணையான நூல் வேறெதுவும் இல்லை யெனவும், பல நூற்றாண்டுகளாக இந்நூல் அதிகார பூர்வ மான அரச கட்டளை என மதிக்கப்பட்டு வந்ததாகவும், முன் னுரையில் எழுதியுள்ளனர். மனுஸ்மிருதி மற்ற மத நூல் களைப் போலவே, பிரெடரிக் நியட்சேவின் கண்ணோட் டத்தில் படிக்கப்பட வேண்டும்.
ஒரு விஷயம் தெளிவாகிறது; பக்ளர் இந்த நூற்றாண் டிற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார். படிப்பதற்கு ஒரு பள் ளிக்கூட புத்தகத்தைப் போலிருக்கிறது; ஆனால், ஆரியர் களுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மேலும் குறிப்பிடுகிறார்: கற்பனையான பாரம்பர்யக் கதைகளையும், ஜோடிக்கப்பட்ட கட்டுக் கதைகளையும் தன் கருத்துக்கு ஆதரவாக சில விவாதங்களையும் முன் வைத்திருக்கிறார், இருப்பினும், அவைகளுக்கெல்லாம் ஆதாரமோ, அதிகாரபூர்வமான பதிவேடுகளோ எதுவுமில் லாமையால், வாதங்கள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. இந்துக்களின் மிதக்கும் நெறிமுறைகளில் மனு பல வடி வங்களில் தோன்றுகிறார். பிரம்மாவாக, அவருடைய மறுபிறப்பாக, மாமுனிவராக, முதல் அரசனாக, மன்னர் களின் முதல் மன்னனாக, மனித வர்க்கத்தின் முதல் தந்தையாக, அதன் சமுதாய, ஒழுக்க போதனைகளைக் கற்பித்தவராகக், காட்சியளிக்கிறார்.
வெண்டி, ஸ்மித் ஆகியோர் குறிப்பிடுவதைப்போல இந்தியாவின் பூர்வீக கால நூல்களில் நாங்கள் கண்டதைப் போலவே இந்த மனுஸ்மிருதியும் முனிவர்களால் (பார்ப்ப னர்கள்) இயற்றப்பட்டது என்பதை மட்டுமின்றி, இந்த மனுதர்ம சாஸ்திரம் அந்த முனிவர்களின் (பார்ப்பனர்கள்) சுயநலத்திற்காகவே எழுதப்பட்டது என்பதையும் விளக்க முற அறிந்தோம். இந்தியாவின் பூர்வீக மக்களின் வாழ்க்கை நெறிகளுக்கும் கல்வியறிவிற்கும் தாங்களே முன்னோடிகள் என்பதைப் போலவும் சித்திரித்து, உலகத்துக்கே புத்திமதி கூறும் அளவிற்குத் தங்களை உயர்த்திக் காட்டி இந்த முனிவர்கள் (பார்ப்பனர்கள்) இந்த மனுதர்ம சாத்திரத்தை எழுதியுள்ளனர். உண்மையான மனிதன் எப்படியிருக்க வேண்டும்? என்பதைப் பற்றியும் அதற்கு இந்த முனிவர் களே வழிகாட்டிகளாக விளங்கினார்கள் எனவும் குறிப் பிட்டுள்ளனர்.
தகவல்: ‘இந்து’ 8.11.1992 பி. இராதாகிருஷ்ணன்
மேனாட்டு அறிஞர்களே வியந்து பாராட்டி விட்டார் களாம். மேலே எடுத்துக்காட்டப்பட்ட அறிஞர்கள் பொட் டில் அறைவதுபோல ஆய்வு செய்து குவித்திருக்கிறார்களே இதற்கு என்ன பதில்?
‘சோ’ வகையறாக்கள் தான் கூற வேண்டும்.
No comments:
Post a Comment