திருச்சி, அக். 31- பெரியார் பெருந்தொண்டர் மணப்பாறை பொ.திருமால் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது இல்லத்தில் வைக் கப்பட்டிருந்த அவரது படத் திற்கு வீரவணக்கம் செலுத் தப்பட்டது.
தொடர்ந்து நினைவு நாள் கூட்டம் தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் துரை.காசி நாதன் தலைமையில் திருச்சி மாநகர திராவிடர் கழகத் தலைவர் சி.மருதை, திராவி டர் தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது.
பொ.திருமால் அவர்களை யும், அவரது இயக்கப் பணி களைப் பற்றியும் நினைவு கூர்ந்து தலைமைக்கழகப் பேச்சாளர் பெரியார் செல் வன் உரையாற்றினார். இக் கூட்டத்தில் திமுக நகர செய லாளர் ராமசாமி, மூத்த வழக் குரைஞர் துரை.அழகிரி, வழக் குரைஞரணி ஆனந்தன், நகர கழகத் தலைவர் பொறியாளர் சி.எம்.எஸ்.ரமேசு, ஒன்றிய இளைஞரணி பாலமுருகன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் முனைவர் எஸ். ஏ.டி ஜெஸ்டின், ஒன்றியகுழு உறுப்பினர் முருகேசன், தோழர்கள் தனபால், சங்கீதா, திராவிடர் இயக்கக் தமிழர் பேரவை இருதயராஜ், இலக் கிய அணி பசுலுதீன் ஆகி யோர் கலந்து கொண்டனர். திருமால் மகன் தி.வீரமணி வரவேற்புரையாற்றினார். திருமால் பேரன் பாலன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment