சென்னை பெரியார் திடல் முன்பு மாநில மகளிரணி பொறுப்பாளர்கள் பங்கேற்பு
சென்னை, அக்.5 உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்ய நாத்தின் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை- படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் இன்று (5.10.2020) காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உ.பி. மாநிலம் ஹத்ராசில் தாழ்த்தப்பட்ட இளம்பெண், ஜாதி ஆதிக்க வெறியர்களால் மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாட்டையே அதிர்ச் சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இச்சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், திரைக் கலைஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான உ.பி., பா.ஜ.க. அரசோ, குற்றவாளிகளைப் பாதுகாக்க தீவிரமாக முயன்று வருகிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த இளம் பெண்ணின் உடலை அவரது பெற்றோரிடம் தராமல், நள்ளிரவில் அவசர அவசரமாக தாங்களாகவே எரித்துச் சாம்பலாக்கியதுடன், இளம் பெண் வல்லுறவே செய்யப்படவில்லை என்றும் வாதிட்டு வருகிறது.
பிஜேபி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது முதல் தாழ்த்தப் பட்டவர்கள் குறிப்பாக அச்சமூகப் பெண்கள் வன்கொடுமைக் கும், படுகொலைக்கும் ஆளாவதைக் கண்டித்து 5.10.2020 அன்று காலை 10 மணியளவில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறையின் சார்பில் அனைத்து மாவட்டங் களிலும் குறிப்பிட்ட இடத்திலோ அல்லது வீடுகளின் முன்பாகவோ கழகக் கொடியைக் கைகளில் ஏந்தி, முகக் கவசம் அணிந்து, இடைவெளி விட்டு, உ.பி.யில் நடந்துள்ள காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து அறவழி ஆர்ப்பாட் டத்தை நடத்துமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 3.10.2020 அன்று அறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கழக மகளிரணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் கழகத் தோழர்கள் கழகக் கொடிகளை கைகளில் ஏந்தி முகக் கவசம் அணிந்து இடைவெளி விட்டு அறவழி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னை பெரியார் திடல் முன்பு காலை 10 மணியளவில் நடைபெற்ற அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி தலைமையேற் றார். மாநில திராவிடர் கழக மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில்கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்! பாலியல் வன்கொடுமைகளைக் கண்டிக்கிறோம்! நீதி வேண்டும் நீதிவேண்டும்! வன்கொடுமைகளால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும்! வெட்கம் வெட்கம்!
21-ஆம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளா? பள்ளி மாணவிக்கும் பாலியல் வன்முறை பச்சைக் குழந்தைக்கும் பாலியல் வன்முறை! பாட்டிக்கும் பாலியல் வன்முறை! அய்யய்யோ... வெட்கக் கேடு! மனித சமூகத்துக்கு வெட்கக் கேடு! உத்தரப் பிரதேசத்தில் நடப்பது மக்களாட்சியா? மனுதர்ம ஆட்சியா? மக்களாட்சியா? காட்டாட்சியா? யோகி நடத்தும் ராமராஜ்ஜியம் சனாதனத்தின் சாம்ராஜ்ஜியம் பதவி விலகு பதவி விலகு! உ.பி.யில் நடக்கும் காவி அரசே பதவி விலகு பதவி விலகு! மோடி நடத்தும் ராமராஜ்ஜியம் ஆரியக் கூட்டத்தின் சாம்ராஜ்ஜியம் பாலியல் வன்கொடுமைகள் பெண்கள் பிரச்சினை மட்டும் அல்ல... மனித குலத்தின் பிரச் சினை! பெண் என்பவள் புனிதமல்ல...பெண் என்பவள் கடவுள் அல்ல... பெண் என்பவள் கவுரவம் அல்ல... பெண்கள் என்போர் சக உயிரே! கரண்டியை வீசி எறி! கராத்தே கற்றுக் கொள்! சிகை வளர்ப்பை விட்டு ஒழி! சிலம்பம் கற்றுக் கொள்! கல்விக் கூடங்கள் அனைத்திலும் தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிப்போம்! மத்திய அரசே! மாநில அரசே! பெண்களின் தற்காப்புக்காக துப்பாக்கி அனுமதி வழங்கிடு! எத்தனை எத்தனை வன்கொடுமை! தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து நிகழும் வன்கொடுமை! ஜாதியத்தின் பெயராலே எத்தனை எத்தனை வன்கொடுமை! பாலியல் ரீதியில் வன்கொடுமை! பெற்றோரே! பெற்றோரே! பெண் குழந்தைகள் வளர்ப்பை விட ஆண்கள் வளர்ப்பில் அக்கறை செலுத்துவீர்! பெண்களைச் சம உயிராய் மதிக்கும் பெண்களைச் சக உயிராய் மதிக்கும் ஆண் பிள்ளைகளை வளர்த்தெடுப்போம்! பெண்ணே பெண்ணே போராடு!பெரியார் கொள்கை துணையோடு! போன்ற ஒலி முழக்கங்கள் இந்த ஆர்ப் பாட்டத்தில் எழுப்பப்பட்டன.
இந்த அறவழி ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர்,
வீ. அன்புராஜ், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல திராவிடர் கழகச் செயலாளர் தே.செ.கோபால், சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சோ. சுரேஷ், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் தி.செ. கணேசன், திருவண்ணாமலை மாவட்ட மேனாள் தலைவர் கவுதமன், சி. வெற்றிச்செல்வி, க. சுமதி, த.மரகதமணி, மீனாகுமாரி, மோகனப்பிரியா, தங்க. தனலட்சுமி பா. ஆனந்தி, அருண், பெரியார் பிஞ்சு தமிழ்மாறன், ஆ. வெங்கடேசன், பவன்குமார், வை. கலையரசன், விமல்ராஜ், இளங்கோ, கலைமணி ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment