மனுதர்மம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

மனுதர்மம்

பிறப்பிலே யாரும்


சமமில்லை எனும்


வர்ணாசிரமத்தின்


குடுமி தானே மனுதர்மம்


 


பிரம்மாவின் முகத்தில் பிறந்து


முதுகில் நூலணிந்தோருக்கு


சாமரம் வீசிடும்


சாணக்கியம் தானே மனுதர்மம்


 


கல்வி எனும் பேராயுதத்தை


அக்கிரகாரத்திற்கு உள்ளேயே


அடைத்து வைக்க போராடிய


அதர்மம் தானே மனுதர்மம்


 


வர்ணத்தில் உயர்ந்தவன்


கொலையே செய்தாலும்


தண்டனை கூடாதென


வக்காலத்து வாங்கும்


அநீதியின் குரல் தானே


இந்த மனுதர்மம்


 


ஜாதிக்கொரு நீதி வகுத்து


அதிலே குளிர் காயும்


குள்ள நரிகளைப் பாதுகாக்கும்


அரண் தானே மனுதர்மம்


 


தொட்டால் தீட்டு


பார்த்தால் தீட்டு எனும்


தீண்டாமை வேருக்குப் பாயும்


நீர் தானே மனுதர்மம்


 


அவாளுடன் சமமாய்


நம்மவர்கள் அமர்ந்தால்


நம் ஆசனப் பக்கத்தை


அறுக்கச் சொல்லும்


ஆதிக்க வெறிதானே மனுதர்மம்


 


தவளையைக் கொன்றால்


என்ன பிராயச்சித்தமோ


சக மனிதனைக் கொன்றாலும்


அதுவே பிராயச்சித்தம் எனும்


திமிர்த்தனம் தானே மனுதர்மம்


 


பெண்கள் குறித்த


அருவருப்புக்  கருத்துகள்


மண்டிக் கிடக்கும்


ஆணாதிக்க கிடங்கு தானே


இந்த மனுதர்மம்


 


சம்பூகனின் தலை கொய்து


சமத்துவத்திற்கு வேட்டு வைக்கும்


இராமபிரான்களின்


சட்டப்புத்தகம் தானே மனுதர்மம்


 


ஏகலைவனின்


கட்டை விரலைக்


காணிக்கையாய் கேட்ட


துரோணர்களின்


புனிதப்புத்தகம் தானே மனுதர்மம்


 


மனித குலத்திற்கே


எதிரானது மனுதர்மம்


அதை எரித்திடும் தீயில்


பிறக்கட்டும் சமதர்மம்


- பாசு . ஓவியச்செல்வன்


No comments:

Post a Comment