வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஒரு பயனும் இல்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 7, 2020

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஒரு பயனும் இல்லை!

ஹாத்ரஸ் சம்பவம் : மோடி மவுனம் காப்பது ஏன்?


ராகுல் காந்தி கேள்வி!



பாட்டியாலா,அக்.7, “வேளாண் சட்டங் களால் விவசாயிகளுக்கு ஒரு பயனும் இல்லை என்றும் ஹாத்ரஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?" என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் செய்தியாளர் களைச் சந்தித்த ராகுல் காந்தி, நாட்டின் வளர்ச்சியையே மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கீழே தள்ளிவிட்டது, தன்னைக் கீழே தள்ளியது பெரிய விஷயம் அல்ல எனக் கூறினார். ஹாத்ரஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஹாத்ரஸ் சம்பவத்தின் வலியை உணர்வார்கள் என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, வேளாண் சட்டங் களால் விவசாய கட்டமைப்புகள் உடைத்தெறியப்படுவ தாகவும், இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு ஒரு பயனும் இல்லை எனவும் குற்றம்சாட்டினார். பிப்ரவரி மாதம் நாட்டின் பொருளாதார சரிவு குறித்து தாம் கருத்துக் கூறியதற்கு 22 நாட்களில் சரியாகும் என்று பிரதமர் மோடி கிண்டல் செய்ததாக தெரிவித்த ராகுல் காந்தி, ஜி.எஸ்.டி-யால் சிறு, குறு தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மூன்றாவது நாள் போராட்டத்தின் போது கூறுகையில்,


வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்கு தலாகும். விவசாயிகளுக்கு எதிராக கருப்பு சட்டங்களை மோடி அரசு இயற்றியுள்ளது. கரோனா குறித்து நான் பிப்ரவரி மாதம் எச்சரித்தேன். அப்போது நான் ஜோக் அடிப்பதாக கூறினார். கரோனா ஊரடங்கின் போது, சிறு தொழில்களை மோடி அரசாங்கம் நசுக்கிவிட்டது. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பே சிறு, குறு தொழில்கள்தான். ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் நாங்கள் உள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச அரசு நெருக்கடி கொடுக்கிறது. ஆனால், ஹாத்ராஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை' என்று குற்றம் சாட்டினார்.


No comments:

Post a Comment