செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

செய்தியும், சிந்தனையும்....!

‘சூதுவாது' ஆபத்தே!


இந்தியாவில் யாரும் 'பப்ஜி' (ஆன்லைன் சூது) விளையாட முடியாது - நிரந்தரத் தடையைத் தொடர்ந்து வாபஸ் பெறுவதாக சீன நிறுவனம் அறிவிப்பு!


வரவேற்கத்தக்க முடிவு. வாழ்க்கையே சூதாட்டமாக மாறி தற்கொலையில் கொண்டு விட்டுவிடக் கூடாது அல்லவா!


சென்றாண்டு


என்னாயிற்று?


'நீட்' தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் இரண்டாவது முறை தேர்வு எழுத 'ஆன்லைன்'மூலம் பயிற்சி: - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.


கடந்த ஆண்டு அரசு நடத்திய பயிற்சி மய்யத்தில் பயின்றுவெற்றி பெற்றோர் பூஜ்ஜியம்தானே!


‘நீட்'டை நடை கட்ட முயற்சி செய்யுங்கள், அதுதான் முக்கியம்!


தள்ளுபடி எதை?


தீபாவளியை ஒட்டி சிறப்பு சலுகைகள் - தள்ளுபடி: - ஜோயாலுக்காஸ் நிறுவனம் அறிவிப்பு


தீபாவளி போன்ற ஊதாரிப் பண்டிகைகளால் மக்கள் கடனாளி ஆவதுதான்  மிச்சம்! உழைப்பைச் சுரண்டும் இந்தச் சூதினைத் தள்ளுபடி செய்வதுதான் முக்கியம்.


புரிகிறதா?


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிப்போர் 41 விழுக்காடு. ஆனால், இவர்களுக்கு மருத்துவக் கல்வியில் சேரக் கிடைக்கும் இடங்களோ 0.14 விழுக்காடு.


'நீட்' தேர்வு, யாருக்குப் பாதிப்பு? புரிகிறதா?


எல்லோருடைய முயற்சியும் 'நீட்'டை ஒழிப்பதில் இருக்கட்டும்!


பெற்றோர்களே விளையாடாதீர்!


பிளாஸ்டிக் பையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த - திருத்தணியையடுத்த வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிளாஸ்டிக் பை கழுத்தில் இறுகி, மூச்சுத் திணறி மரணம்!


விளையாடிக் கொண்டுதானே இருக்கிறார்கள் - நம் பிள்ளைகள் என்று பெற்றோர்கள் விளையாட்டுத்தனமாக இருப்பது ஆபத்து!


என்ன நடக்குது நம்மைச் சுற்றி...?


ருசியாவில் மரபணு பயிர்களுக்குத் தடை?


தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இந்தியா கவனிக்கட்டும்!


No comments:

Post a Comment