டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு, குடியரசுத் தலைவர் நேற்று ஒப்புதல் வழங்கினார். பிரதமர் மோடி, வானொலிப் பேச்சில், மசோதாக்களை நியாயப்படுத்திப் பேசினார்.
டெக்கான் கிரானிகல், சென்னை:
- கரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு உலகம் முழுவதும் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட சர்வேயில், பணக்காரர்கள் செல்வம் அதிகரித்துள்ளது என்றும், ஏழைகள் மேலும் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
- திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை மீது சில காலிகள் காவிச்சாயம் பூசியது அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை உருவாக்கியது. அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா, விவசாயிகளுக்கு தங்கள் நிலம் மீது இருக்கும் உரிமையை தடுத்துவிடும் என கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், எம்.பியுமான பினாய் விஸ்வம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மகாராஷ்டிரா அரசு பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து முகலாய அரசர்கள் பற்றிய வரலாற்றுப் பதிவை நீக்கியுள்ளது. இதே போன்று உ.பி. அரசும் செய்துள்ளது. இதன் மூலம் இந்த மாநில மாணவர்கள் வரலாற்றின் உண்மைச் சம்பவங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பை இழக்கிறார்கள். அரசுகள் இதனை நீக்கினாலும், வரலாறு மாறாது என மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- கடந்த அய்ந்து மாதங்களாக பூட்டப்பட்டு இருந்த சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
தி இந்து:
- பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் நீதி இன்னும் வாழ்கிறது என்ற எண்ணம் பிறக்கும் என இவ்வழக்கில் சாட்சியம் அளித்த ஹாஜி மெக்பூப் தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா
28.9.2020
No comments:
Post a Comment