கரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்திலும், ஊரடங்கிலும் தளர்வுகள் செய்யப்பட்டிருந்தாலும், கரோனா பரவலில் கொஞ்சமும் தளர்வில்லை; வேகமாகப் பரவி வருகிறது என்பதே உண்மை. எனவே, நம் எச்சரிக்கையில் எந்தத் தளர்வும் இருக்கக் கூடாது. முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், போதிய தனி மனித இடைவெளியைப் பேணுதல் ஆகியவை அவசியம்! அவசியம்!!
பொது வெளியில் இயங்கும் போதும், தோழர்களுடன் பங்கேற்போ, சந்திப்புகளோ, போராட்டங்களோ நடத்தினாலும் மேற்கண்ட பாதுகாப்பு நடைமுறையைக் கைக் கொள்ளுதல் முக்கியம். பொது மக்கள் அனைவருக்கும், நம் தோழர்களுக்கும் எச்சரிக்கையுடன் கூடிய மிக முக்கியமான வேண்டுகோள் இது!
கவனம்! கவனம்!! கவனம்!!!
- கி. வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment