திருவண்ணாமலை, செப்.30 கரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய, மாநில அரசு களால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வழிபாடு செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாத்தில் இருந்து பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து தொடங்கி உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை பவுர்ணமி நிறைவடைகிறது. போக்குவரத்து அனைத்தும் சீரானதால் வருகிற பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம் என்று மக்கள் எதிர் பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் தொடர்ந்து கரோனா ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமியன்று பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment