பெரியார் பாலிடெக்னிக்கில் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 30, 2020

பெரியார் பாலிடெக்னிக்கில் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா

.com/img/b/R29vZ2xl/AVvXsEjqR71IiItyUBVwLPbvO0sYMCHL0d_kpEUqMEJ4z8y9VDKGjrGHll7UE0OPlvAp7WUiCzEKb1EGrMRki5F0YFlKV4JPiUQ3BO3Mxv8KOolmxVqZViAzcDpx0NkLUzFN8LA4dU1m1t1c43E/


வல்லம், செப். 30- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட் டது. 17.9.2020 அன்று பாலி டெக்னிக் வளாகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா மாலை அணிவித்தார். பெரியார் பிறந்த நாளையொட்டி பாலிடெக்னிக் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தந்தை பெரியாரின் அறிவியல் தொலைநோக்குப் பார்வை, வைக்கம் வீரர் தந்தை பெரியார், தந்தை பெரியாரின் சமுதாய தொண்டு, பெண்ண டிமை ஒழித்த தந்தை பெரியார் ஆகிய தலைப்புகளில் இப்பாலிடெக்னிக்கின் துறைத் தலைவர்கள் கூகுள் மீட் செயலி வாயிலாக மாணவர்களுக்கு உரையாற்றினர்


No comments:

Post a Comment