புதுடில்லி,செப்.1 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி கூடுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்கு மத்தியில் நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
நோய் தொற்று பாதிப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக் களவை தலைவர் ஓம் பிர்லாவும், மாநிலங் களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர்.
நாடாளுமன்ற அமைச்சரவை குழு மழைக் கால கூட்டத் தொடரை செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடத்த பரிந்துரை செய்தது.
அதன்படி செப்டம்பர் 14ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் என மக்களவை தலைமை செயலகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு மக்களவையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்து உரையாற்றுவார்.
No comments:
Post a Comment