நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் அனைத்து எம்பி.க்களுக்கும் கரோனா பரிசோதனை சபாநாயகர் பிர்லா அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 30, 2020

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் அனைத்து எம்பி.க்களுக்கும் கரோனா பரிசோதனை சபாநாயகர் பிர்லா அறிவிப்பு

புதுடில்லி, ஆக. 30- ‘நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்கும் முன் பாக அனைத்து எம்பி.க்களும் கட்டாயம் கரோனா பரி சோதனை செய்து கொள்ள வேண்டும்,’ என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.


கரோனா பாதிப்புக்கு மத் தியில், நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கான முன்னேற்பாடு களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கவனித்து வரு கிறார். இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்), எய்ம்ஸ், மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, டில்லி அரசு அதிகாரிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஆலோசனை நடத்தி னார்.


பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘கூட்டத் தொட ரில் பங்கேற்கும் அனைத்து எம்பி.க்களும், 72 மணி நேரத் திற்கு முன்பாக கரோனா பரி சோதனை செய்ய கொள்ள வலியுறுத்தப்படுவார்கள். அதேபோல், நாடாளுமன்றத் திற்கு வரக்கூடிய அதிகாரிகள், அமைச்சக பிரதிநிதிகள், ஊடக மற்றும் அவை செயலக அதிகாரிகள் அனைவரும் பரி சோதனை செய்து கொள்ள வேண்டும். அனைவரிடமும் தொடுதலற்ற பாதுகாப்பு பரிசோதனைகளும் செய்யப் படும்,’’ என்றார்.


'கேள்வி நேரத்தை


குறைக்கக் கூடாது'


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர் பாக மக்களவை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவரான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, மக்க ளவை சபாநாயகருக்கு 2 பக்க கடிதம் எழுதி உள்ளார்.


அதில் அவர், ‘கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த வும், அதே சமயம் எம்பிக் களின் பாதுகாப்பையும் கருத் தில் கொண்டு சபாநாயகர் எடுத்து வரும் நடவடிக்கை களை மனதார பாராட்டுகி றோம். ஆனால், கரோனாவை காரணம் காட்டி, கேள்வி நேரத்தையும் பூஜ்ய நேரத் தையும் குறைக்க பரிந்துரை இருப்பதாக அறிகிறோம். இது, தேச நலன் குறித்த விஷ யங்களை எம்பிக்களை அவை யில் எழுப்புவதை தடுக்கும் முயற்சியாகும். தற்போதைய கரோனா பாதிப்பு காலகட் டத்தில், கேள்வி நேரத்தையும், பூஜ்ய நேரத்தையும் குறைப் பது எம்.பி.க்களின் நலனுக் கானதாக இருக்காது,’ என கூறியுள்ளார்.


No comments:

Post a Comment