டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள், கரோனா தொற்று காரணமாக மேலும் தாமதமாகும் என உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
- வேதம் படித்த பார்ப்பனர்களைத் திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.75000 நிதி உதவி அளிக்கப்படும் என்ற ஆந் திரப் பிரதேச பார்ப்பன நல வாரியம் அறிவித்த திட்டத்திற்கு, பார்ப்பனப் பெண்களிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை.
- பிரதமர் மோடி, மாணவர்கள் நலன் சார்ந்த நீட், ஜே.இ.இ. தேர்வு பற்றிப் பேசாமல், பொம்மை தயாரிப்பது பற்றி மான்கி பாத்தில் பேசுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் :
- இரண்டு காலாண்டுகளில் தொடர்ந்து இந்தியப் பொருளா தாரம் சரிவைக் கண்டுவரும் நிலையில் சென்ற காலாண்டிலும் (ஏப்ரல்-ஜூன்) 20 சதவீத சரிவு இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
- பார்ப்பனர்கள் எத்தனைபேர் துப்பாக்கி வைத்துள்ளனர், எத்தனைபேர் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்ற கணக்கெடுப்பை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்க்கு உ.பி.அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தக் கடிதம் மீதான தொடர் நடவடிக்கை இல்லை என்றாலும், இது உ.பி.யில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்களுக்கு ஏற் பட்டுள்ள பொருளாதார இழப்பைப் பற்றி பல்வேறு கருத்துகள் கூறுகின்றன. மோடி அரசின் ஆத்ம நிர்பார் இந்தியா, நிதி ஆதா ரம் பெருக்குவதற்கு புதிய உத்திகளைக் கையாள வேண்டும். கடவுளின் செயல் எனக் கூறும் அரசு, முல்லா யோசனைப்படி, ஏன் கோயில்களின் கதவுகளைத் தட்டக்கூடாது என தனது கட்டுரையில் சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
- தேசிய கல்விக் கொள்கை-2020அய், இந்தியா முழு மைக்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்த முடியாது. தேர்வு மற் றும் துவக்கப் பள்ளிகளில் சீர்திருத்தம் போன்ற அனைத்தும் தெளிவற்று உள்ளது என மேற்கு வங்க அரசு அமைத்த குழு தனது அறிக்கையில் கூறி யுள்ளது.
தி டெலிகிராப்:
- மாதந்தோறும் மக்களிடம் பேசும் மனத்தின் குரல் (மான்கிபாத்) என்ற பிரதமர் மோடியின் நேற்றைய பேச்சு, பா.ஜ.க.வின் யூடியுப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. மோடியின் பேச்சுக்கு 17000 பேர் ஆதரவாகவும், 1,80,000 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பிரதமரின் பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் இத்தகைய எதிர்ப்பு, நீட், ஜே.இ.இ. தேர்வு உண்டு என்ற அறிவிப்பின் காரணமாக இருக்கலாம் என்ற தெரிகிறது.
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு, டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது டிவிட்டரில் ‘வாமன ஜெயந்தி’ வாழ்த்துகள் என பதிவிட்டது, மலையாள மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே போன்று வாழ்த்து தெரிவித்தபோது, எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அதே சங் பரிவார் எண்ணத்தை அர்விந்த் கேஜ்ரி வாலும் எதிரொலித்துள்ளார்.
தி இந்து:
- ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களுக்குரிய பங்கினை மோடி அரசு மறுப்பது, கூட்டாட்சியை அழிக்கும் செயல்; மாநிலங்களின் பொருளாதார நலனை அழிக்கின்ற திட்டமிட்ட செயல்பாடு என மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா சாடியுள்ளார்.
- தேசிய குடிமக்கள் பதிவேடு அடிப்படையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட உள்ள 19 லட்சம் மக்களின் கதி கடந்த ஓராண்டாக அப்படியே நீடித்து வருகிறது. அதற்குரிய படிவம் தரப்படாததால், அம்மக்கள் மறுஆய்வு மனுவையும் தர இயலாத நிலை தொடர்கிறது.
- குடந்தை கருணா
31.8.2020
No comments:
Post a Comment