நீண்ட நெடுந்தோற்றம்
நேர்மை தவறாதான்
பாண்டிய நாட்டுப்
பழந்தமிழே யாண்டும்
மொழிவான், மொழிப் போரில்
மூத்தோன் பகைக்குப்
பொழிவான் இடியின் புயல்
தமிழர் திருநாளைத்
தன்பொருளை ஈந்தே
தமிழறிஞர் தம்மை
அழைத்துத் தமிழுணர்வை
ஊட்டுவான் அண் ணல்தங்கோ
ஆரியரை ஊரறிய
ஓட்டுவான் ஓடுஓடென்று
செந்நீரை இந்திய
நாட்டிற்குச் சிந்தினான்
கண்ணீரைத் தந்ததிந்த
காங்கிரசு, வெந்நீரைச்
செந்தமிழ் வேருக்குப்
பாய்ச்சியதும், போராட
அந்தமிழ்க் கானான் அரண்
தமிழ்நிலத்தை மீட்க
தமிழ்நில ஏட்டைத்
தமிழ்நலத்தோ டீந்தான்
தமிழர், தமிழ்மொழி
தாய்நாட்டுக்கென்றே
தனையீந்தான்; ஈந்தானே
நோய்நாட்டுக் கேற்ற மருந்து!
இவ்வாறு புரட்சிக்கவிஞரால் பாராட்டப்பட்டவர் அண்ணல் தங்கோ. காந்திமதி என்ற இயற்பெயர் கொண்டவருக்கு ‘‘அரசியல் மணி'' என்று பெயர் மாற்றம் செய்த (அன்னை மணியம்மையார்) சிறப்புக்குரியவர் இவர்.
தூய தமிழை தன் சொல்லில் எல்லாம் அரங்கேற்றும் அருந்தமிழ்த் தொண்டர்- சுயமரியாதை இயக்கச் சீலர் - விடுதலைப் போராட்ட வீரர்.
‘பார்க்' தொடர்வண்டி நிலையில் செல்லவேண்டும் என்றால், ‘பூங்கா நிலையத்திற்கு அனுமதிச் சீட்டுத் தாருமய்யா' என்று இயல்பாகக் கேட்கக் கூடியவர்.
திரைப்படப் பாடலாசிரியர் - பல நூல்களை யாத்தவர்.
‘‘ஊழ்வினை'' என்று சொல்லி!
பாட்டாளி உப்பைச் சுரண்டுகின்றார்!
ஊழ்வினையை எதிர்த்தே - ஒழிப்போம்!
உலகப் புரட்சி செய்வோம்!
என்னே இவரின் பொன் வரிகள்!
- மயிலாடன்
No comments:
Post a Comment