விமான நிலையப் பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதா?
மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, ஆக. 30- நாட்டில் உள்ள பல் வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சரக்குகள் கையாளு தல், விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான நிறுவ னங்களைத் தேர்வு செய்யும் ஏலம் நடத்தப்பட உள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறு வனங்களுக்கான தகுதியை சமீபத்தில் இந்திய விமான ஆணையம் மாற்றி அமைத்து, ஆண்டுக்கு ரூ.35 கோடி விற்றுமுதல் இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் தான் பங்கேற்க முடியும் என புதிய விதியைக் கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நிறுவனங்களின் கூட்டமைப்பான மத்திய விமானக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் ஆய்வு(சிஏபிஎஸ்ஆர்) உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த சிஏபிஎஸ்ஆர் என்பது விமா னத்தை சுத்தம் செய்தல், சரக்குகளை கையாளுதல், விமானங்களை வரிசை யாக நிற்கவைக்க ஒத்துழைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் நிறுவ னங்களின் கூட்டமைப்பாகும். நீதிபதி கள் மத்தியஅரசின் நிலைப்பாடு, இந் திய விமான ஆணையத்தின் நிலைப் பாடு குறித்தும் கடுமையாக அதிருப்தி தெரிவித்தனர். மத்திய அரசின் நிலைப் பாடு எங்களுக்கு வேதனையளிக்கிறது. ஒருபுறம் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா என்று பிரச்சாரம் செய் கிறார்கள், மறுபுறம், விமான நிலைய சேவைக்கான டெண்டரில் சிறு நிறு வனங்களை துரத்திவிடும் வகையில் விதிகளை மாற்றுகிறார்கள். இந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகிறோம். மறுபுறம் நம்முடைய சொந்த நாட் டைச் சேர்ந்த தொழில்முனைவோர் களை ஊக்கப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிடுகிறோம்.
நீங்கள் ஏலத்தில் பெரிய நிறுவனங் கள் மட்டுமே போட்டியிட வேண்டும் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்புடைய நிறுவனங்கள்தான் ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறீர்கள். சிறிய நிறுவனங்கள் பிராந்திய விமான நிலையங்களில் பணிபுரிந்திருப்பார்கள், அங்கு குறைந்த அளவில் திட்டமிடப்பட்ட விமானங்களின் வரத்து இருக்கும் அல்லது இல்லாமலோ இருக்கும், இதில் அவர்களின் அனுபவம் புறக் கணிக்கப்படுகிறது. மத்திய அரசும், இந்திய விமான ஆணையமும் சிறு நிறுவனங்களை ஏலத்திலிருந்து வெளி யேற்ற விரும்பினால், வெளிப்படை யாக அவர்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லுங்கள். மேக் இன் இந்தியா, தற்சார்பு பொருளாதாரம் பற்றி பேசாதீர்கள். சிறிய நிறுவனங் களை ஏலத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் உங்கள் செயல்பாடு எங்க ளுக்கு வேதனையளிக்கிறது.
சிறிய நிறுவனங்கள் வளர்வதற்கு அனுமதிக்காவிட்டால், சந்தையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் மட் டுமே இருக்கும், அரசுக்கே அவர்கள் ஒரு கட்டத்தில் கட்டளையிடுவார் கள். இந்தியாவில்தான் தயாரிக்க வேண் டும் என்று கூறுகிறோம், இந்தியா வுக்காக சேவை செய்ய வேண்டும், தற்சார்பு பொருளாதாரமாக மாற வேண்டும் என்று பேசுகிறோம். இந் நாட்டில் உற்பத்தி செய்வதும் அல் லது கடை நடத்துவதும் கடினம் என்று கூறி மக்கள் வெளியேறிய பல சம்பவங்கள் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, இந்திய விமான ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிவிக்க தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
No comments:
Post a Comment