சென்னை உயர்நீதிமன்றத்தில் செப். 7 முதல் நேரடி விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 30, 2020

சென்னை உயர்நீதிமன்றத்தில் செப். 7 முதல் நேரடி விசாரணை


சென்னை,ஆக.30- சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம் பர் 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கரோனா ஊரடங்கின் காரணமாக தொற்று பர வலை கட்டுப்படுத்தும் நோக் கில் பல்வேறு வகையான சேவைகள் முடக்கப்பட்டன.


கல்வி நிலையங்கள், பெரும் பாலான அரசு அலுவலகங் கள் மூடப்பட்டதைபோன்று, நீதிமன்றத்தில் நேரடி விசா ரணையும் தற்காலிகமாக ஒத் திவைக்கப்பட்டது.


பிறகு அரசு அளித்த தளர் வுகளின்படி வீட்டில் இருந்த படியே வழக்குகளை விசாரிக் கலாம் என்று அறிவிக்கப்பட் டது. அதன்படி கடந்த 5 மாதங்களாக நீதிபதிகள் வீட் டில் இருந்தபடியே வழக்கு களை விசாரித்து வந்தனர்.


இதனிடையே 6ஆவது ஊரடங்கு வரும் 31ஆம் தேதி யுடன் நிறைவடைய உள்ள நிலையில், கரோனா பரவலும் கட்டுப்படுத்தப் பட்டுள்ள தால், சென்னை உயர்நீதிமன் றத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் வழக்குகளை நேர டியாக விசாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல் கட்டமாக இரு நீதி பதிகள் அடங்கிய ஆறு அமர்வு மட்டும் நேரடி விசாரணை செய்யும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.


தலைமை நீதிபதி தலை மையில் மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment