செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் தொடரும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் தொடரும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, ஆக.31 தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் 4 ஆம் கட்ட கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி  அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தடைகள் நீக்கம், கட்டுப்பாடுகள் தொடர்வது குறித்த அறிவிப்புகள் வருமாறு


வரும் ஒன்றாம் தேதி மாவட்டத்திற்குள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டத் திற்குள் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கும்.  மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது.


திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் செயல்படத் தடை நீடிக்கிறது.


விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் வழி காட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.


செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல் லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், செயல்படத் தடை தொடரும்.


செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சென்னையில் பேருந் துகள் ஓடும். மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்திற்கு அனுமதி.


ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழுமுடக்கம் செப்டம்பர் மாதம் முதல் ரத்து.


சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல மாவட்ட ஆட் சியரின் அனுமதியுடன் இ- பாஸ் பெற வேண்டும்.


தமிழகத்தில் உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.


தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.


திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.


தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் நடை முறை ரத்து.


வெளிநாடு, வெளிமாநி லங்களில் தமிழகத்திற்கு வரு வதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும்.


தங்கும் வசதியுடன் கூடிய விடுதிகள், ரிசார்ட் டுகள், கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதி.


சமுதாய, பொழுதுபோக்கு, ஊர்வலங்கள் நடத்த விதிக் கப்பட்ட தடை தொடரும்.


அய்.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி


இருப்பினும் தவிர்க்க இய லாத பணி தவிர பிற பணி யாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


சென்னையில் அரசுப் பேருந்து சேவை செப்.1 முதல் வழிகாட்டு நடைமுறைகளு டன் அனுமதி.


சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும்.


மின்சார ரயில்சேவைகளுக்கான தடை தொடரும்.


பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.


கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங் களுக்குச் செல்லும் வெளியூர் பயணிகளுக்கு இ-பாஸ் உண்டு


சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி - பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.


செப். 1ஆம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்.


தனியார், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்.


வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.


தமிழகத்தில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல்  கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி.


வெளிமாநிலங்களில் இருந்து தினமும் 50 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி.


தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே  இ-பாஸ் முறை ரத்து செய்யப்படும். செப்டம்பர் 30ஆம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment