ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 30, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல். எம்.பில். படிப்பு இனி கிடையாது. சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம்.

  • மோடி அரசு அறிவிப்பு அரசாக இருக்கிறது. நடைமுறை யில் ஒன்றும் காணோம் என மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை பள்ளிகள், திரையரங்குகள், மெட்ரோ ரயில்கள் போக்குவரத்து தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என நாடு முழுவதற்குமான மூன்றாம் கட்ட அடைப்புக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. யோகா மற்றும் உடல் பயிற்சி நிலையங்கள் திறக்கலாம்.

  • ராஜஸ்தான் மாநில சட்டமன்றக் கூட்டத்தை ஆகஸ்டு 14-ஆம் தேதி துவக்கிட ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

  • அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளரைத் துணை வேந்தராக நியமித்திட தமிழக அரசு முயன்றிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, அனைத்திந்திய அரசியல் கட்சித் தலைவர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சினையில் அவர்களது ஆதரவு கோரி தொலைப்பேசியில் பேசினார்.

  • தனியார் நிறுவனங்களுக்கும் இஎஸ்அய் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:



  • மத்திய அரசில் கல்வி அமைச்சர்களாக இருந்த மவுலானா ஆசாத் போன்றவர்கள், வரலாற்றை மாற்றி எழுத வைத்துவிட்டார்கள் என டுவிட்டரில் பதிவிட்ட தற்போது ஹோம் கார்டு அய்.ஜி.யாக இருக்கும் முன்னாள் சிபிஅய் இயக்குனர் நாகேஷ்வரராவ் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிருந்தா காரத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதி யுள்ளார். மேலும், டில்லி மந்திர் மார்க் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

  • கல்வி - ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள நிலையில் தன்னிச்சையாக மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்திலும் விவாதிக்காமல் வெளியிட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

  • குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஹர்திக் படேல் நியமனம், விவசாயிகளின் ஆதரவு உள்ளதால் அங்கு அரசியல் களம் மாறுபடும் என பேராசிரியர்கள் கிறிஸ்டப் ஜாப்ரலட் மற்றும் ஷரிக் லாலிவாலா இணைந்து எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை:



  • புதிய கல்விக் கொள்கை, சமூக நீதியை குலைத்திடும் என கேரள மாநில கல்வி அமைச்சர் ஜலீல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

  • சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டிட வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளு மன்றச் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


தி இந்து, டில்லிப் பதிப்பு:



  • ரபேல் விமானம் வாங்கியதற்கு இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள். ஆனால், ரூ.526 கோடி விலையுள்ள விமானத்தை ரூ.1670 கோடிக்கு வாங்கியதேன், 126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் மட்டும் வாங்கியதேன்?, அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்குப் பதிலாக, திவால் நோட்டீஸ் அளித்த அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடிக்கு ஒப்பந்தம் அளித்தது ஏன்? என மோடி அரசுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு முழுவதும் 179 தொழில் நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டு விட்டன என அகில இந்தியத் தொழில் நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது.


- குடந்தை கருணா


30.7.2020


No comments:

Post a Comment