சிறந்த தமிழ் இலக்கிய வாதியும், எழுத்தாளருமான நண்பர் நா.கந்தசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
மூத்த தமிழ் எழுத்தாளர் வரிசையில் வைத்து எண்ணப் படும் அவர். ஜெயகாந்தன் வாழ்க்கை வரலாற்றைக் கூட ஓர் ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்ற முயற்சியை எடுத்து வெற்றி பெற்றவர். மயிலாடுதுறையைச் சார்ந்தவர்.
பிரபல முற்போக்குச் சிந்தனையாளர், எழுத் தாளர், ஆய்வாளர் நண்பர் கோவை ஞானி அவர்களும் சென்ற வாரம் மறைந்தது தமிழ் இலக்கிய உலகத்திற்குப் பேரிழப்பாகும். ஆழ்ந்த திறனாய்வாளர் அவர்.
இரண்டு தமிழ் அறிஞர்களை - எழுத்தாளர் - இலக்கிய வல்லுநர்களை தமிழ்கூறும் நல்லுலகம் இழந்தது மிகப்பெரும் இழப்பாகும்!
அத்தகையோரின் இடத்தை நிரப்பிட எளிதில் முடியாவிட்டாலும், இன்றைய தலைமுறை முயன்று அந்த காலி இடங்களை நிரப்ப முன் வருவதே அவர்களுக்கு நாம் காட்டும் உண்மை யான மரியாதை ஆகும்.
அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும் பத்தினருக்கும், இலக்கிய உலகத்து எழுத்தாளர் குடும்பத்தினருக்கும் நமது ஆறுதலும் இரங்கலும் உரித்தாகுக.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
31.7.2020
No comments:
Post a Comment