ஒற்றைப் பத்தி : அக்கிரகாரம் தோன்றியது எப்படி?
‘தமிழ்த் தாத்தா' என்று கூறப்படும் உ.வே.சாமிநாதய் யர் தனது சுயசரிதையில் தன் சொந்த ஊரான உத்தமதான புரம் எப்படி உண்டாயிற்று என்ற விவரத்தை எழுதியுள் ளார்.
‘‘சற்றேறக் குறைய இரு நூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தங்களுடைய பரிவாரங்களு டன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். ஆங்காங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டு களித்தும், தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடை யில் தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து மைல் தூரத்தில் உள்ள பாபநாசத்துக்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம் போல உணவு முடித்துக் கொண்ட பிறகு, தாம்பூலம் போட்டுக்கொண்டு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்தி ருந்தார்.
தம்முடன் வந்தவர்களோடு பேசிக் கொண்டு, பொழுது போக்குகையில், பேச்சுக்கி டையே அன்று ஏகாதசியென்று தெரிய வந்தது. அரசர் ஏகாதசி யன்று ஒருவேளை மாத்திரம் உணவு கொள்ளும் விரதம் உள்ளவர். விரதத் தினத்தன்று தாம்பூலம் தரித்துக் கொள்ளும் வழக்கமும் இல்லை. அப்படி யிருக்க, அவர் ஏகாதசி என்று தெரியாமல் அன்று தாம்பூலத் தைத் தரித்துக் கொண்டார். எதிர்பாராதபடி விரதத்திற்குப் பங்கம் நேர்ந்ததைப்பற்றி வருந்திய அரசர், அதற்கு என்ன பரிகாரம் செய்யலா மென்று சில பெரியோர்களைக் கேட்டார். அப்பெரியோர்கள், ‘‘ஓர் அக்ரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேத வித்துகளாகிய அந்தணர் களுக்கு கல் வீடுகளோடு, பூமியையும் தானம் செய்தால், இந்தத் தோஷம் நீங்கும்'' என்றார்கள்.
‘‘இதுதானா பிரமாதம்? அப்படியே செய்துவிடுவோம். இதே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம்'' என்று அரசர் மனமுவந்து கூறி, உடனே அங்கே ஓர் அக்ரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி, வேதாத்தியயனம் செய்ய 48 பிராமணர்களை அருகிலும், தூரத்திலும் உள்ள ஊர்களிலி ருந்து வருவித்து, வீடுகளையும், நிலத்தையும் தானம் செய்தார். அந்த உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால், அவ்வூர் ‘‘உத்தமதானபுரம்'' என்னும் பெயரால் வழங்கலா யிற்று. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உத்தமதானபுரத் தில் வைதீக ஒழுக்கம் பிறழா மல் வாழ்ந்து வந்தார்கள். இந்த உத்தமதானபுரம் இன்னும் தன் பெயரை இழக்காமல் தஞ்சாவூர் ஜில்லாவில் பாபநாசம் தாலுகாவில் ஒரு கிராமமாக இருந்து வருகின்றது'' என்று உ.வே.சாமிநாதய்யர் எழுதி யுள்ளார்.
ஒரு முட்டாள் அரசனின் மதக் கிறுக்குத்தனத்திற்கு - மத போதைக்கு இலாபப் பரிசு யாருக்கு அமைகிறது என்பது தான் முக்கியமாகக் கவனிக் கத்தக்கது.
வாளெடுத்துப் போர் புரிந்து எதிரிகளின் தலை சாய்த்து வாகை சூடும் மன் னர்கள், தர்ப்பைப் புல் முன் னாலே தலைசாய்ந்த நிலை யைத்தானே தந்தை பெரியார், நம் மக்களுக்குப் பாடம் போல் சொல்லிக் கொடுத்தார். இன் றளவும் திராவிடர் கழகம் அத னைத்தானே செய்து கொண்டு இருக்கிறது.
அக்ரகாரங்கள் எப்படித் தோன்றின என்பது இப் பொழுது புரிகிறதா?
- மயிலாடன்
No comments:
Post a Comment