சென்னை, ஜூலை, 30- பெரியார் பெருந்தொண்டர் ஏ.தணிகாசலத்தின் படத் திறப்பு நிகழ்ச்சியில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார் கலந்து கொண்டு இரங்கலுரை ஆற் றினார்.
வடசென்னை மாவட்டத் தின் வியாசர்பாடி பகுதியில் பல்வேறு பொறுப்புகளில் தொண்டாற்றிய பெரியார் பெருந்தொண்டர் ஏ. தணி காசலம் கடந்த 27 ஜூலை, 2020 அன்று பிற்பகல் 2 மணி யளவில் உடல் நலிவு கார ணமாக தனது 91 ஆவது வயதில் காலமானார். அதைத் தொடர்ந்து 28-.7.-2020 அன்று காலை 10 மணிக்குப் படத் திறப்பு நிகழ்வும், இறுதி ஊர் வலமும் நடைபெற்றது.
ஆவடி மாவட்ட அமைப் பாளர் உடுமலை வடிவேல் தலைமையில், அரும்பாக்கம் தாமோதரன் இணைப்புரை வழங்கினார். வழக்குரைஞர் பா.மணியம்மை, அன்பு, ஜீவா ஆகியோர் இரங்கலுரை ஆற் றினர். இறுதியில் படத்தைத் திறந்து வைத்து திராவிட மாணவர் கழக மாநிலச் செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தந்தை பெரியார் காலம் தொட்டு, தொண் டாற்றி வந்துள்ள தணிகா சலம் போன்றவர்களின் சிறப் புகளைப் பட்டியலிட்டு இரங்கலுரை ஆற் றினார்.
தொடர்ந்து, 10 வரிசை களில் 20 கறுஞ்சட்டைத் தோழர்கள் கைகளில் கழகக் கொடியுடன் வீரவணக்க முழக்கங்களுடன் அணிவகுத் தனர். இறுதி மரியாதை அணி வகுப்பு மேல்பட்டி பொன் னப்பன் தெருவிலிருந்து புறப் பட்டு, பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக சென்று எரி யூட்டும் நிலையத்தை அடைந் தது. எந்தவிதமான மூடநம் பிக்கையும் இல்லாமல் எரி யூட்டப்பட்டது. குறிப்பாக எரியூட்டும் நிலையத்தினுள் சென்றபிறகு தணிகாசலத்தின் உடலை அவரது மகள் த.மரகதமணி உட்பட, மணி மேகலை, மீனா, சுமதி, வழக் குரைஞர் பா. மணியம்மை, லட்சுமி ஆகிய பெண்களே தூக்கிச்சென்றனர்.
வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், துணைச் செயலாளர் கி.ராமலிங்கம், கொரட்டூர் இளவரசன், சென்னை மண் டல மாணவர் கழகச் செய லாளர் வ.ம.வேலவன், ஓட் டேரி பாஸ்கர், திருவொற்றி யூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் மோகன், காளியப் பன், நாகராசன், புரசை அன்பு, எருக்கஞ்சேரி வெண் மதி, அன்பு, தமிழ்தாசன் மற் றும் ராமு, கெடார் மும் மூர்த்தி, கொடுங்கையூர் வாசு, கொரட்டூர் முத்தழகு, கண்ண தாசன்நகர் ஜீவா, பாக்கிய லட்சுமி, பெரியார் மாணாக் கன், க.தமிழ்செல்வன், மறைந்த ஏ.தணிகாசலத்தின் தங்கை மகள் சாந்தா, சண்முகப்பிரியன், மணித்துரை, உண்மை மு.பவானி, சக்கரவர்த்தி, விடு தலை சி.கே. பிரித்திவிராஜ், பெரம்பூர் வெங்கடேசன், வடசென்னை இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், ஊடகவியலாளர்கள் கோவை சகா, பூங்கோதை, பெரம்பூர் தியாகராசன், செந்தமிழ் சேகுவேரா, ஆனந்தி, சந்தோஷ், அருணாச் சலம், கவுதமன், கொடுங்கை யூர் ராஜசேகர், ரவிக்குமார் மற்றும் மேல்பட்டி பொன் னப்பன் தெருவில் உள்ள லட்சுமி, விஜய் ஆகியோர் ஊர்வலத்தில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் கிருமிநாசினி மூலம் கைகளைத் தூய்மை செய்யும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
தி.மு.க. பகுதிச் செயலாளர் செயராமன் மற்றும் டேங் பேக்டரி மணி, தி.மு.க. 44 ஆவது வட்டச் செயலாளர் ஆர்.எஸ்.மனோகர் மற்றும் எஸ்.முத்துராமலிங்கம், பி.பா.சண்முகம், பா.ராதா, மணி, கே.வினோத், கே.சூரியா, எஸ்.சுப்பு, பி.ரவி உள் ளிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த தோழர்கள் பலர் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தி.மு.க.வின் பகுதிப்பிரதிநிதி கண்ணன் இரண்டு நாட்களும் உடனிருந்து அனைத்துப் பணிகளுக்கும் உறுதுணையாக இருந்தார். நிகழ்வு மொத்தமும் ஊர டங்கு விதிமுறைகளைப் பின் பற்றி நடந்தது என்பது குறிப் பிடத்தக்கது.
முதல்நாள் இரவு (27-.7.-2020) சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன், ஊடகவிய லாளர் ஜோதி ராமலிங்கம், கவிதா ராமலிங்கம், பூங் கோதை, மங்களபுரம் பாஸ் கர், ரமணி, நதியா, பார்த்திபன் ஆகியோர் நேரில் வந்திருந்து தணிகாச லத்தின் உடலுக்கு மலர் மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment