முக்கியமாகத் தமிழ்ப் பெருமக் களுக்கு நான் சில வேண்டுகோள் விட ஆசைப்படுகிறேன். முதலாவதாக, பெரியார் கொள்கை ஒன்றுதான் நாட் டிற்கு ஏற்றது. உண்மையாக மக்களின் நன்மைக்குப் பாடுபடுவது, காரணம் இக்கட்சி தேர்தல் கட்சியல்ல, ஓட்டுக் கேட்கும் கட்சியல்ல. எனவே ஆங் காங்கு கழகம் இல்லாத ஊர்களில் கழகம் அமைக்க வேண்டும். எல்லாத் தமிழர் களும், தமிழர்களுக்குப் பிறந்த தமிழர்களும் தி.க.வில் உறுப்பி னராக வேண்டும்.
இரண்டாவதாக 'விடுதலை' பத்திரிகையை ஒவ்வொரு வரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும். மற்றப் பார்ப்பன ஏடுகளை மறந்து கூட எவரும் வாங்கக்கூடாது. அவை நமக்கு துரோகம் இழைப்பவையாகும். தமிழர்களுக்காக, தமிழர்களின் கல்வி உத்தியோக நியமனத்துக்காகப் பாடுபடும் ஏடு 'விடுதலை' ஒன்று தான். எனவே விடுதலையை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
மூன்றாவதாக குடியரசு, விடுதலை மற்றும் பகுத்தறிவு வெளியீடுகளான பார்ப்பனப் பித்தலாட்டங்களை விளக்கும் நூல்களும் மற்றும் பல நூல்களும் மலிவு விலையில் விற்கப் படுகின்றன. அதனை வாங்கி யாவரும் படிப்பதோடு மற்றவர் களையும் படிக்கச் செய்ய வேண்டும்.
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
(10.5.1958இல் லால்குடியில் நடைபெற்ற வட்ட ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து)
- 'விடுதலை', 18.5.1958
No comments:
Post a Comment