நாகர்கோவில், ஜூன் 29 உல கில் கரோனா வைரஸ் அழிந்து உலகிலுள்ள மக் கள் நலம் பெற வேண்டி மருந்துவாழ் மலை அடி வாரத்தில் சுமங்கலிகள் முன்னிலையில் 58 பசுக் களை கொண்டு மஹா கோ பூஜை நடைபெற்றதாம்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கானோர் தங் கள் உயிர்களை இழந்து வருகின்றனர். இந்தியாவி லும் கரோனா வைரசின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நிலை யில் கொடூர அரக்கனான கரோனா வைரஸ் அழிந்து உலகத்தில் உள்ள மக்கள் நலம் பெற வேண்டி குமரி மாவட்டம் மருந்து வாழ் மலை அடிவாரத்திலுள்ள புன்னார் குளத்தில் சுமங் கலிகள் முன்னிலையில் 58 பசுக்களை கொண்டு மஹா கோ பூஜை நடைபெற்றதாம்.
இதில் கலப்பை மக்கள் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான பி.டி. செல்வகுமார், காணி மடம் யோகி ராம் சுரத் குமார் மந்த்ராலய குரு தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் மற்றும் சுமங் கலி பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனராம்.
பூஜைக்குப் பின்னர் பி.டி.செல்வகுமார் செய்தி யாளர்களிடம் கூறியதா வது:
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அழிந்து உலக மக்கள் சுபிட்சம் பெற இந்த மஹா கோ பூஜை நடத்தப்படுகிறது . வைர சால் பாதிக்கப்பட்ட மக் கள் அதிலிருந்து மீள முடி யாது என்ற பயத்தையும், பதற்றத்தையும் விடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். அரசாங்கம் அவர்களுக்கு தன்னம்பிக் கையை கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத் திற்கு வழி வகை செய்ய வேண்டும் என்றார்.
யாகம் நடத்திய பொன் காமராஜர் சுவாமிகள் உள்ளூர் கேபிள் சேனல் ஒன்றில் பேசுகையில், உலக சுபிட்சத்திற்காக யாகம் நடத்திய பார்ப்பனர்களுக்கு யாகத்திற்காக வாங்கப் பட்ட 38 பசுக்களும் ‘தான மாக' வழங்கப்பட்டதாம், அதே போல் பார்ப்பனர் களின் மனம் குளிர அவர் களுக்கு காணிக்கையை யாகத்தில் கலந்துகொண்ட பக்தர்களிடமிருந்து 'தான மாகப்' பெற்று வழங்கப்பட் டது என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment