விடுதலை ஏட்டை உடனுக்குடன் படித்து நாட்டு நடப்பையும், சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளையும் சுடச்சுடத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில் சுப்புரத்தினத்துக்கு அவ்வளவு ஆவல்!
விடுதலை படித்து முடிக்கையில், பெரியார் சுற்றுப் பயணத் தேதிகளையும் ஒரு தடவை படித்துக் கொள்வார். தலையங்கத்தையும் அக்கறையுடன் படிப்பார். இது மட்டுமே நோக்கமல்ல. பிரஞ்சியர் ஆட்சிக் குட்பட்ட அரசினர் பள்ளிக்கூட ஆசிரியரான கனக சுப்புரத்தினம், விடுதலை, குடிஅரசு இதழ்கள் தவறாது படிக்கும் சுயமரியாதைக்காரன் என்று, உடன் பணியாற்று கிறவர்களும் வெளிச்சமாக அறிந்து கொள்ள வேண்டும். ஓரளவு இணக்கம் காட்டுகின்ற ஆசிரியர்கள் விடுதலை படிக்க வாய்ப்பும் தரவேண்டும்! இதுதான் இவரின் நோக்கம்!
- புரட்சிக்கவிஞரின் மைந்தர் மன்னர் மன்னன் எழுதியது
No comments:
Post a Comment