குறிஞ்சிப்பாடி அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியர் கோவி.கிருட்டிணமூர்த்தி, ரிதம் ஆர்க்கெஸ்ட்ரா தமிழழகன் ஆகியோர் கரோனா விழிப்புணர்வுக் குழுவாக கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொற்று நோய்த் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்தனர். 25.3.2020 அன்று தொடங்கிய பிரச்சாரம் 23.5.2020 அன்று நிறைவு பெற்றது. வடலூர் ஜோதி நகரில் குழுவினரின் மானுட நேயத்தை, கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தைப் பாராட்டி கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஊக்க உரையாற்றி முகக் கவசங்களை பொது மக்களுக்கு வழங்கினார். குழுவினரின் சீரிய பணிகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர், முதன்மைக் கல்வி அலுவலர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உட்பட பலரும் வாழ்த்தினர்.
Sunday, May 31, 2020
கரோனா விழிப்புணர்வு பிரச்சாரக் குழுவினருக்கு பாராட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment