எங்களின் புரட்சிப் ‘‘பா!'' - கவிஞர் கலி.பூங்குன்றன் - - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 29, 2020

எங்களின் புரட்சிப் ‘‘பா!'' - கவிஞர் கலி.பூங்குன்றன் -

.com/img/b/R29vZ2xl/AVvXsEjzk3bOabUPjrIpAh-eAFNGsSTng1s8Vfb88nZ5hyphenhyphenA0qLJ8550EvHsayQtvhiGo1-b64hSwn9NoA34z3v91PT1JRLowUOF-jHfg_XBqFnkn-JoAxxNPDww9PtvPDjZutLzRltKHIHJlPlM/


பார்வையோ பா¬(ற)ரயும்


விழுங்கும்


தோற்றமோ பகையின்


வேரையே பிடுங்கும்


நடையோ நாட்டைச் சூழும்


நலிவுகளை ஒடுக்கும்


எழுத்தெல்லாம்


ஏறுவரிசை தான்!


எதிர்கொள்ளும்


பகைப் புலன்களையும்


பந்தாடும் -


பெருக்கல் தொகை தான்


எழிலார்ந்த சீர்களோ


இனம் அழிக்கும்


கிருமிகளாம்


‘இலக்கணப் பிழைகளை'


எரித் தழிக்கும் நாசினிகள்!


எதுகை மோனைகளின்


இன்பச் சுற்றுலா


எது பகை, எது நம் வகை


என்பதை இனங்காட்டும்


எம்மினத்தின் இன்பப் பலா!


தந்தை பெரியார் எனும்


சூரிய விண்மீனைச்


சுற்றிவரும் குறட்பா


சுயமரியாதை இயக்கத்தின்


சூலில் சனித்த வெண்பா!


எங்கள் புரட்சிக் கவி


வாழிய -வாழியவே!


No comments:

Post a Comment